Connect with us
GBU

Cinema History

குட் பேட் அக்லி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இதைக் கவனிச்சீங்களா?.. இவ்ளோ விஷயங்கள் இருக்கா?..

ஆண்டுக்கு ஒரு படம் மட்டுமே என்ற அளவில் நடித்து வருகிறார் தல அஜீத். கடைசியாக அவர் நடித்த துணிவு படத்திற்கு பிறகு இது கொஞ்சம் நீண்ட இடைவெளி தான். விடாமுயற்சி வருவதற்குள் இழு இழு என்று இழுத்து வருகிறது. அதற்குள் குட் பேட் அக்லி படத்தோட அப்டேட்டுகள் வந்தவண்ணம் உள்ளன. இந்தப் படத்தோட பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதோட ஸ்பெஷல் என்னன்னு பார்ப்போமா…

இதையும் படிங்க… அரண்மணை படத்தில் தமன்னா சம்பளம் இத்தனை கோடியா? அடங்கப்பா! பொண்ணு வெவரம் தான்!

குட் பேட் அக்லியில் 3 முக்கிய கெட்டப்புகளில் தல அஜீத் வருகிறார். மார்க் அண்டனியை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. சமீபத்தில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. இது அல்டிமேட் ஸ்டார் அஜீத் என்பதற்கு ஏற்ப ரசிகர்கள் ரசிக்கும் வகையில் அவரது முற்றிலும் மாறுபட்ட 3 குணங்களைக் காட்டுவதாக உள்ளன.

பளபளப்பான பச்சை சட்டை, சால்ட் அண்ட் பெப்பர் லுக் ஹேர் ஸ்டைல், கைகள் முழுவதும் டாட்டூஸ், கூலிங் கிளாஸ், சட்டையில் டிராகன்கள், வடிவமைக்கப்பட்ட வித்தியாசமான வளையல்கள்,வாட்ச் என ஒரே மாதிரியாக டிரஸ், ஸ்டைல் இருந்தாலும் அவர்களது முகபாவனைகள் ஒன்றுக்கொன்று மாறுபட்டவையாக உள்ளன. அதில் ஒன்றை குட் என்று சொல்லலாம். மற்றொன்றை பேட் என்றும் அடுத்ததை அக்லி என்றும் சொல்லலாம்.

இதையும் படிங்க… புகழில் ஊழல் செய்யும் கவின்… இதெல்லாம் ரொம்பவே ஓவரா இருக்கு… விளாசி தள்ளும் பிரபலம்!…

இது ரசிகர்களுக்கு உண்மையிலேயே பெரிய விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை. இது ஒரு தனித்துவம் வாய்ந்த ஆக்ஷன் திரில்லர் படம் என்கிறார்கள். தற்போது இந்தப் படத்திற்கான சூட்டிங் ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. ராக் ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் ஒலிப்பதிவு செய்கிறாராம். அதே போல அபிநந்தன் ராமானுஜம் படத்தில் ஒளிப்பதிவு இயக்குனராக பணிபுரிந்து வருகிறார்.

படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வருகிறது. இந்தப் படம் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு தனி முத்திரையைப் பதிக்க ஒரு அருமையான வாய்ப்பு என்றே சொல்லலாம். அந்த வகையில் பர்ஸ்ட் லுக் போஸ்டரே அனைவரையும் சுண்டி இழுத்து விட்டது.

இந்தப் படம் ரசிகர்களுக்கு அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரையரங்குகளில் விருந்தாக வந்து வெளியாகிறது.

google news
Continue Reading

More in Cinema History

To Top