Connect with us
VK

Cinema History

கேப்டன் பேச்சை கேட்காத இயக்குனர்… கோபப்படாமல் விஜயகாந்த் சொன்னது இதுதான்!…

தளபதி படத்துல மணிரத்னம் அசிஸ்டண்ட்டா இருந்தவர்  இயக்குனர் முரளி அப்பாஸ், கேப்டன் விஜயகாந்த் உடனான தனது திரையுலக அனுபவங்கள் குறித்து இவ்வாறு பேசியுள்ளார்.

சொந்த ஊர் புதுக்கோட்டை. பொண்ணு எடுத்தது பட்டுக்கோட்டை. அதனால் விஜயகாந்த்  ‘பட்டுக்கோட்டை’ன்னு தான் கூப்பிடவாரு. ஒரு தடவை விஜயகாந்த் நடித்த ஒரு இனிய உதயம் படத்தில் அசிஸ்டண்ட் டைரக்டராக வாய்ப்பு கிடைச்சது. வேலையைத் தக்க வைப்பதற்கு திறமை அவசியம்.

எனக்கு முன்னாடி இருந்த அசிஸ்டண்ட்டுக எல்லாம் சண்டை போட்டுட்டுப் போயிட்டாங்க. கடைசி வரை நான் மட்டும் தான் அசிஸ்டண்ட். ஒரே படத்துல எல்லாரையும் விரட்டிட்டு இடத்தைப் பிடிச்சிட்டியேன்னு கேப்டன் கிண்டலா சொன்னாரு. அப்புறம் டைரக்டருக்கும் படம் இல்ல. எனக்கும் இல்ல. வாகினி ஸ்டூடியோவில் கூலிக்காரன் பட சூட்டிங் நடந்தது. அங்கு கேப்டன் இருந்தாரு. நமக்குத் தெரிஞ்ச ஒரே ஹீரோ அவரு தான். கோல்டு கலர்ல மேக்கப் போட்டுருந்தாரு. ‘வச்ச குறி தப்பாது’ என்ற சாங் சூட்டிங்கிற்கு மேக்கப் போட்டு நிக்கிறாரு. என்னைப் பார்த்ததும் ‘டேய் பட்டுக்கோட்டை’ன்னு கூப்பிடறாரு.

Murali appas

Murali appas

அவரே செட்ல இருந்து வந்து என்னை விசாரிச்சாரு. எப்படி இருக்கீங்கன்னு கேட்டாரு. சும்மா தான் இருக்கேன்னு சொன்னேன். ஒரு ரெண்டு நாள் டைம் கொடுங்கன்னு கேட்டாரு. உங்களை சேர்த்து விடுறேன்னாரு. அவரு ரொம்ப சிம்பிள். அவர் மனசுக்குத் தான் இன்னைக்கு அவரு பேசப்படறாரு. நானே புதுசு.

ஒரு படம் பண்ணிருக்கேன். என்கிட்ட அவர் இப்படி பேசணும்னு தேவையில்லை. 3வது நாள் கேப்டன் என்னை உள்ளத்தில் நல்ல உள்ளம் படத்தை இயக்கிய மணிவண்ணனிடம் சேர்த்து விட்டார். அவரும் மறுநாள் என்னை வரச் சொல்லிவிட்டார். அடுத்தநாள் இயக்குனர் கலைமணி என்னைத் தற்செயலாக சந்திக்க எங்கிட்ட ஒர்க் பண்ணச் சொன்னார். அந்தப் படம் தான் தெற்கத்திக் கள்ளன். அதுல ஹீரோ விஜயகாந்த்.

அவரு சேர்த்து விட்ட இடத்துல நான் போகல. வேற இடத்துக்கு வந்துட்டேன். என்ன நினைப்பாரு? 3வது நாள் சூட்டிங்ல அவரைப் பார்க்குறேன். நானே அவரிடம் போய் பேசறேன். ஜாயிண்ட் பண்ணிட்டியான்னு கேட்குறாரு. ‘இல்ல சார் திடீர்னு இங்க ஜாயிண்ட் பண்ண வேண்டியதா ஆச்சு’னு சொன்னேன். ‘சூப்பர் இடம்… அதை விட சூப்பர் இடம்’னு சொல்றாரு. அப்படி ஒரு வெள்ளந்தியான ஆளு. யதார்த்தமான மனிதன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top