Connect with us
ilai

Cinema News

நான் ஏன் அங்க போய் அவரை பாக்கணும்?!.. கோபப்பட்ட பாக்கியராஜ்.. இளையராஜாவை பிரிந்த பின்னணி!…

Baghyaraj: தமிழ் திரையுலகில் திரைக்கதை மன்னன் என்று போற்றப்படும் இயக்குனர் பாக்கியராஜ். ஆரம்பத்தில் இவர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில் போன்ற திரைப்படங்களில் பணியாற்றிய பாக்யராஜ் சிகப்பு ரோஜாக்கள் படத்தின் மூலமாகத்தான் வசனகர்த்தாவாக பணியாற்றினார்.

அந்தப் படத்தை தொடர்ந்து  ‘புதிய வார்ப்புகள்’ திரைப்படத்தில் பாக்கியராஜை முதன்முதலாக ஹீரோவாக அறிமுகப்படுத்தினார் பாரதிராஜா. இதற்கு பிறகு தான் அவர் தனியாக படம் இயக்க முடிவு எடுத்திருந்தார். அதன்படி சுவரில்லாத சித்திரம் என்ற திரைப்படத்திற்காக கதையை தயார் செய்த பாக்கியராஜ் தொடர்ந்து பல படங்களை இயக்கினார்.

இதையும் படிங்க: ரஜினி நாலாயிரம் மட்டும் சம்பளமா வாங்கி நடிச்சது இந்த படம்தான்! என்ன கேரக்டர்னு தெரியுமா?..

இப்படி தன்னுடைய சினிமா வாழ்க்கையை படிப்படியாக முன்னேற்றிக் கொண்டிருந்தார் பாக்கியராஜ். இவருடைய படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றியவர் இளையராஜா. ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இவர் இயக்கிய படங்களில் இளையராஜா பணியாற்ற வில்லை. அதற்கு காரணம் என்ன என்பதை சமீபத்திய ஒரு பேட்டியில் பாக்கியராஜ் கூறியது வைரலாகி வருகின்றது.

இளையராஜா எப்பொழுதும் தனது ஸ்டுடியோவில் தான் கம்போஸ் செய்து கொண்டிருப்பார். அதனால் பட வேலைகள் சம்பந்தப்பட்ட எந்த வேலையானாலும் ஸ்டூடியோவில் தான் சந்திப்பது வழக்கம். இதையே தான் பாக்கியராஜ் பின்பற்றி வந்தார். அதுவரை இளையராஜாவை அவருடைய ஸ்டூடியோவில் வைத்து தான் சந்தித்துக் கொண்டிருந்தார் பாக்கியராஜ்.

இதையும் படிங்க: ‘வணங்கான்’ படப்பிடிப்பில் தடுமாறிய பாலா! ஓடி வந்து உதவிய அந்த நடிகர் யாருனு தெரியுமா?

திடீரென ஸ்டுடியோவிற்கு போக அங்கு இருந்த இளையராஜாவின் உதவியாளர் ஒருவர் இளையராஜாவை பார்க்க வேண்டும் என்றால் அவருடைய வீட்டிற்கு சென்று போய் பாருங்கள் என கூறினாராம். ஆனால் பாக்கியராஜ் ஏன் அவர் வீட்டுக்கு போய் அவரை பார்க்க வேண்டும் ? படவேளைகளுக்காக நான் அடிக்கடி இங்கு தானே அவரை வந்து சந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

ஏதாவது நிகழ்ச்சி விழாக்கள் என்றால் அவர் வீட்டில் சென்று சந்திப்பது சரியாக இருக்கும். அதனால் நான் ஏன் அவர் வீட்டுக்கு போய் பார்க்கணும்? அதனால் நான் இங்கு வந்தேன் என்பதை மட்டும் இளையராஜாவிடம் தெரிவித்து விடுங்கள் என சொல்லிவிட்டு போய்விட்டாராம் பாக்யராஜ். இதை இளையராஜா எப்படி எடுத்துக் கொண்டார் என தெரியவில்லை.

இதையும் படிங்க: இந்த காம்போ எதிர்பார்க்கவே இல்லையே!… அஜித்தின் அடுத்த படத்தினை இயக்க போவது இவரா?

அதிலிருந்து அவரிடம் இருந்து எந்த ஒரு தகவலும் தொலைபேசி அழைப்புகளும் பாக்யராஜுக்கு வரவே இல்லையாம். இது பாக்கியராஜை அவமதித்ததாக இவர் நினைத்துக் கொண்டாராம். இந்த சமயத்தில்தான் ஏன் நாமும் இசையை கற்றுக் கொள்ளக் கூடாது என்ற ஒரு ஆர்வத்தை தூண்டி இருக்கிறது. அதனால் ஒரு குருவிடம் இவர் இசையை கற்றுக் கொண்டிருக்கிறார். அதிலிருந்து வந்ததுதான்  ‘இது நம்ம ஆளு’ படத்திற்காக முதன்முதலாக பாக்கியராஜ் இசையமைத்த பாடல்கள் வெளிவந்தன.

 

Continue Reading

More in Cinema News

To Top