தாய்லாந்தில் தாராளம் காட்டிய லியோ பட நடிகை!.. உங்க லஞ்ச் டைம்லயும் ரசிகர்கள் பசியாத்துறீங்களே!..

Published on: May 21, 2024
---Advertisement---

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து கடந்த ஆண்டு வெளியான லியோ திரைப்படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய சரிவை சந்தித்தாலும் வசூல் ரீதியாக வெற்றி படமாக மாறியது. கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான வாரிசு மற்றும் லியோ திரைப்படங்கள் இரண்டுமே சொதப்பல் ரகம் தான்.

அதற்கு முந்தைய ஆண்டு வெளியான பீஸ்ட் படத்தை விட பரவாயில்லை என் ரசிகர்கள் ஏற்றுக் கொண்டு படத்தை ஓட்டினர். அடுத்ததாக வெளியாக உள்ள கோட் திரைப்படம் ரசிகர்களையும் நடிகர் விஜயையும் என்ன செய்ய காத்திருக்கிறதோ என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இதையும் படிங்க: தெலுங்கு நடிகர்களை கிண்டல் பண்ணும் விதமாக கமல் செஞ்ச ஒரு காரியம்! ஜனகராஜ் சொன்ன ரகசியம்

லியோ படத்தில் விஜயுடன் இணைந்து நடித்த நடிகைகளில் திரிஷா மட்டுமே பிஸியாக உள்ளார். பிரியா ஆனந்த், மடோனா செபாஸ்டியன் மற்றும் பிக் பாஸ் ஜனனி உள்ளிட்ட பலர் அடுத்தப்பட வாய்ப்பு கிடைக்காமல் வெறும் போட்டோ ஷூட்டை மட்டுமே நம்பிக்கொண்டிருக்கின்றனர்.

பெரிதாக புதிய பட வாய்ப்புகள் இல்லாத நிலையிலும் ஜிடி ஹாலிடேஸ் விளம்பர நிறுவனத்தின் புண்ணியத்தால் தாய்லாந்துக்கு தனது குடும்பத்துடன் தற்போது மடோனா செபாஸ்டியன் சுற்றுலா சென்றுள்ளார். அங்கே லஞ்ச் டைமில் என்ன பீசா ஆர்டர் செய்வது என்கிற பரபரப்பில் அவர் நடத்திய கண்களுக்கு விருந்தளிக்கும் புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மரியாதை கொடுக்காத சரோஜாதேவி!.. ஆனாலும் வாய்ப்பு கொடுத்து தூக்கிவிட்ட எம்..ஜி.ஆர்…

பிரேமம் படத்தின் மூலம் ஹீரோயினாக மலையாளத்தில் அறிமுகமானவர் மடோனா செபாஸ்டியன். விஜய் சேதுபதி நடித்த காதலும் கடந்து போகும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மடோனா செபஸ்டியன் தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் கவண் படத்திலும் நடித்திருந்தார்.

ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் சசிகுமாருக்கு ஜோடியாக கொம்பு வச்ச சிங்கம்டா படத்திலும் அவர் நடித்தார். சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வரும் மடோனா செபாஸ்டியன் லேட்டஸ்டாக வெளியிட்டுள்ள லன்ச் டைம் போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: இந்த காம்போ எதிர்பார்க்கவே இல்லையே!… அஜித்தின் அடுத்த படத்தினை இயக்க போவது இவரா?

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.