Cinema History
சிவாஜிக்கு எம்.ஜி.ஆர் குரலில் பாடிய டி.எம்.எஸ்!.. இப்படி எல்லாம் கூட நடந்திருக்கா..?!
பிரபல பின்னணி பாடகர் டிஎம்.சௌந்தரராஜனின் பாடல்கள் என்றாலே எல்லாமே இனிமை தான். அதிலும் ஒவ்வொரு நடிகருக்கு ஏற்ப குரலை மாற்றிப் பாடுவதில் அவருக்கு நிகர் அவர் தான். சிவாஜிக்கு ஒரு வாய்ஸிலும், எம்ஜிஆருக்கு ஒரு வாய்ஸிலும் பாடி அசத்துவார். அந்த வகையில் ஒரு பாடல் மட்டும் விதிவிலக்காக வந்துள்ளது. அதாவது, டி.எம்.சௌந்தரராஜன் எம்ஜிஆருக்குப் பாடின மாதிரி சிவாஜிக்குப் பாடியுள்ளார். அது எந்தப் பாட்டு, எதற்காக அவர் அப்படிப் பாடினார் என்பதைப் பார்ப்போம்.
சிவாஜிக்குப் பாடும்போது அடிவயிற்றில் இருந்து வார்த்தைகள் வரும். வாயைத் திறந்து அழுத்தம் திருத்தமாகப் பாடுவார். எம்ஜிஆர் ஸ்டைலிஷான ஆக்டர். அவருக்கு ரொம்ப வாயைத் திறக்க மாட்டார். இயற்கையான குரலில் பாடுவார்.
இந்தப் பாட்டையும் அப்படித்தான் பாடியிருப்பார். ‘புதிய பறவை’ படத்தில் வரும் ‘ஆகா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்?’ என்ற பாடல் தான் அது. இந்தப் பாட்டைக் கவனித்தால் உங்களுக்குத் தெரிந்து இருக்கும்.
இந்தப் பாடலை ரொம்ப வாயைத் திறக்காமல் பாடியிருப்பார். எதற்காக இப்படி பாடினார்? இந்த மெட்டை யார் பாடினால் ரொம்ப நல்லாருக்கும் என்பது தான் முக்கியம். இந்த ஆகா மெல்ல நட ஒரு மென்மையான பாடல். இதை ஏ.எம்.ராஜாவோ, பி.பி.ஸ்ரீனிவாஸோ பாடினால் நல்லாருக்கும். ஆனால் இந்தப் பாடலுக்கு நடிப்பவர் சிவாஜி. அதனால் டிஎம்எஸ்சை வைத்துத் தான் பாட வைக்க வேண்டும்.
இதையும் படிங்க… எம்.ஜி.ஆரின் அரசியலை விமர்சித்த கண்ணதாசன்… அதுக்கு புரட்சித்தலைவர் கொடுத்த பதிலடியைப் பாருங்க..!
இந்தப் பாடலைக் கொஞ்சம் சாஃப்டா பாடினால் நல்லாருக்கும் என்று சொல்லப்பட்டது. அதற்கேற்ற மெட்டு தான் அது. அதனால் தான் டிஎம்எஸ். இந்தப் பாடலை எம்ஜிஆருக்குப் பாடினது போல பாடியுள்ளார். அது ரொம்ப அழகான மெலடி பாடல். டிஎம்எஸ் பாடுற விதம் ரொம்ப அழகா இருக்கும்.
அந்தப் பாடல் கேட்பதற்கே ரொம்ப வித்தியாசமாக இருக்கும். இந்தப் பாடலில் 2வது சரணத்தில் கொஞ்சம் வித்தியாசம் காட்டியிருப்பார். சிவாஜிக்குப் பாடியது மாதிரியே பாடியிருப்பார். அடிக்கடி வருவது சிரிப்பு. அதில் அழகிய மேனியே நடிப்பு என்ற வரிகளில் வாயைத் திறந்து பாடியிருப்பார் டி.எம்.எஸ்.