கருடன் விழாவில் அசிங்கப்பட்ட சசிக்குமார்!. பழசெல்லாம் மறந்துபோச்சா விஜய் சேதுபதி?!…

Published on: May 22, 2024
sasikumar
---Advertisement---

சினிமா எப்போதும் ஓடும் குதிரைகளையே பாராட்டும். வெற்றி பெறுபவர்களுக்குதான் அங்கு மதிப்பும் மரியாதையும். பெரிய நடிகர்கள், இயக்குனர்களுக்கு மட்டுமே சினிமா விழாக்களில் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். பெரிய வெற்றியை கொடுத்திருந்தாலும் அதன்பின் சில தோல்விகளை கொடுத்தால் சினிமாவில் மதிக்க மாட்டார்கள்.

இது காலம் காலமாக நடந்து வருகிறது. நகைச்சுவை நடிகராக நடித்து வந்த சூரியை வெற்றிமாறன் தனது விடுதலை படம் மூலம் ஹீரோவாக மாற்றினார். வழக்கமாக ஹீரோக்கள் செய்வதை அவர் செய்யவில்லை என்றாலும் கதையின் நாயகனாகவே நடித்திருந்தார். இப்போது இப்படத்தின் 2ம் பாகம் உருவாகி வருகிறது. இதிலும் சூர்யா நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: விஜயகாந்த் குடும்பத்துக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்! தளபதினா சும்மாவா?

ஒருபக்கம் துரை செந்தில்குமார் இயக்கத்தில் கருடன் என்கிற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். படத்தின் கதையே இவரை சுற்றி நடப்பது போல அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் இயக்குனர் மற்றும் நடிகர் சசிக்குமாரும், மலையாள நடிகர் உன்னி முகுந்தன் ஆகியோரும் நடித்திருக்கிறார்.

garudan

இந்த படத்தின் டிரெய்லர் வீடியோ நேற்று வெளியானது. இதில், சூரிக்கு அதிரடி சண்டைக்காட்சிகளும் இடம் பெற்றிருந்தது. ஒருபக்கம் இந்த படம் தொடர்பான விழாவும் நேற்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்தில் இணைய இருக்கும் முக்கிய நடிகை… இது அஞ்சாவது முறையாம்!…

எனவே, நிகழ்ச்சி தொகுப்பாளர் அவர்கள் இருவரையும் பாராட்டி பேசிக்கொண்டிருந்தார். முழு நிகழ்ச்சியும் சூரி, விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயனை சுற்றியே நடந்தது. ஆனால், அப்படத்தில் நடித்திருக்கும் சசிக்குமாரை யாரும் கண்டுகொள்ளவில்லை. அவர் ஹீரோவாக இருந்த போது சின்ன நடிகராக இருந்தவர் விஜய் சேதுபதி. காமெடி வேடங்களில் நடித்து வந்தவர் சூரி. சசிக்குமார் சுப்பிரமணியபுரம் ஹிட் கொடுத்து 4 வருடஙக்ள் கழித்தே சினிமாவில் நடிக்க வந்தவர் சிவகார்த்திகேயன்.

garudan

சசிக்குமார் ஹீரோவாக நடித்த சுந்தரபாண்டியன் படத்தின் இறுதிக்காட்சியில் வில்லனாக வருவார் விஜய் சேதுபதி. சுந்தரபாண்டியன் வெற்றி விழாவில் விஜய் சேதுபதியால் உள்ளேயே நுழையமுடியவில்லை. அதன்பின் அவரை ஒருவர் கஷ்டப்பட்டு அழைத்து சென்று 10வது வரிசையில் அமர வைத்தார். ஆனால், காலம் இப்போது எப்படி மாறியிருக்கிறது என்பதை பாருங்கள்!…

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.