আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

ரஜினி பட வசூலை வைத்து எடுத்த அஜித்தின் சூப்பர் ஹிட் படம்!.. சூப்பர்ஸ்டார்னா சும்மாவா?!…

Published on: May 23, 2024
rajini
---Advertisement---

80 காலகட்டத்தில் எம்.ஜி.ஆருக்கு பின்னால் வந்த நடிகர்கள் சிலர் திரைப்படங்களில் தங்களை எம்.ஜி.ஆரின் ரசிகர்களாக காட்டிக்கொண்டனர். கமல் கூட தூங்காதே தம்பி தூங்காதே உள்ளிட்ட சில படங்களில் எம்.ஜி.ஆர் பட போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கும் சுவருக்கு முன் நின்று பாட்டு பாடுவதையும், சண்டை போடுவதையும் செய்திருக்கிறார்.

எம்.ஜி.ஆரை திரையில் அதிகம் பயன்படுத்தியது ராமராஜன், பாக்கியராஜ் என்றே சொல்லலாம். ஏனெனில் இவர்கள் எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசியாக இருந்தனர். இவர்கள் இருவரின் திருமணத்தையும் நடத்தி வைத்தவரே எம்.ஜி.ஆர்தான். அதேபோல், ரஜினிக்கு பின் நடிக்க வந்த இளம் நடிகர்கள் படங்களில் தங்களை ரஜினி ரசிகர்கள் போல் காட்டிக்கொண்டனர்.

இதையும் படிங்க: குட் பேட் அக்லி திரைப்படத்தில் நயனை ஓவர்டேக் செய்த ஆதிக் ரவிசந்திரன்… சம்பளம் இவ்வளவா?

வளரும் காலங்களில் விஜய், அஜித் கூட இதை செய்திருக்கிறார்கள். அவர்கள் துவக்கத்தில் நடித்த படங்களை பார்த்த 70 கிட்ஸ்களுக்கு இது தெரியும். விஜய், அஜித் ஆடும் பாடல் காட்சிகளில் பின்னால் உள்ள சுவர்களில் ரஜினி பட போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கும். அதைப்பார்த்தாலே தியேட்டரில் விசில் பறக்கும். அதாவது, விஜய், அஜித் ஆகியோர் படங்களின் வெற்றிக்கு ரஜினியின் புகழ் தேவைப்பட்டது.

மேலும், விஜயும், அஜித்தும் ரஜினியின் ரசிகர்களாகத்தான் இருந்தனர். இப்போதும் விஜய் ரஜினி படத்தை உடனே பார்க்கும் அளவுக்கு அவரின் ரசிகராகத்தான் இருக்கிறார். ஆனால், விஜயை விட ரஜினியிடம் அதிகம் பழகும் வாய்ப்பு அஜித்துக்கே கிடைத்தது. அஜித்தின் படங்கள் தொடர்ந்து வெற்றி பெறாமல் போன சமயம்.

அவரை அழைத்து எனது பில்லா படத்தை ரீமேக் செய்து நடியுங்கள் என ஐடியா கொடுத்தவரே ரஜினிதான். அந்த படத்தின் வெற்றியே அஜித்தை மேலே கொண்டு போனது. இந்நிலையில், அஜித் வளரும் கலாத்தில் நடித்த வான்மதி படத்தின் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசினார்.

vanmathi

ரஜினி சார் நடித்த முத்து படத்தை நான் வினியோகம் செய்தேன். அதில் வந்த வருமானத்தை வைத்தே வான்மதி படத்தை தயாரித்தேன். 4 நாட்களுக்கு ஒருமுறை வரும் பணத்தை வைத்து 4 நாட்கள் அப்படத்தின் படத்தை எடுத்தேன். இப்படியே படத்தின் 60 சதவீத படத்தை முடித்தேன்’ என சொல்லி இருக்கிறார். வான்மதி திரைப்படம் 1996ம் வருடம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.