Cinema History
ஷூட்டிங்கில் ‘வாடா போடா’ என அழைத்த ராதாரவி!.. ரஜினியின் ரியாக்ஷன் இதுதான்!..
ராதாரவிக்கு முன்பே சினிமாவில் நடிக்க வந்தவர் ரஜினி. எம்.ஆர்.ராதாவின் மகன் என்கிற அடையாளம் ராதாரவிக்கு இருந்தது. அதனால், சினிமாவில் அவர் சுலபமாக நுழைய முடிந்தது. ஆனால், ரஜினிக்கு அப்படி இல்லை. சென்னை வந்து திரைப்படக்கல்லூரியில் நடிப்பு பயிற்சி எடுத்து பாலச்சந்தரால் நடிகராக மாறியவர் அவர்.
துவக்கத்தில் கமலுக்கு நெருக்கமானவராகவே ராதாரவி இருந்தார். பெரும்பாலும் துணை கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பார். கதாநாயகியின் அண்ணன் வேடத்தில் மட்டும் பல படங்களிலும் நடித்திருக்கிறார். 80களில் ஹீரோவின் நண்பனாக பல படங்களிலும் நடித்த அவர் 80களின் இறுதியில் வில்லன் நடிகராக மாறினார்.
இதையும் படிங்க: ரஜினி பட வசூலை வைத்து எடுத்த அஜித்தின் சூப்பர் ஹிட் படம்!.. சூப்பர்ஸ்டார்னா சும்மாவா?!…
90களில் தமிழ் சினிமாவின் முக்கிய வில்லனாக ராதாரவி இருந்தார். ரஜினி, விஜயகாந்த் படங்களில் ராதாரவி கண்டிப்பாக இருப்பார். ரஜினிக்கு ராதாரவியை மிகவும் பிடிக்கும். ரஜினியை விட 3 வயது இளையவர் ராதாரவி. எனவே, ரஜினியை எப்போதும் ‘சார்’ என்றே அழைப்பார் ரஜினி.
ரஜினியுடன் சில சமயங்களில் மது அருந்தும் பழக்கமும் ராதாரவிக்கு இருந்தது. இதை அவரே சில பேட்டிகளில் சொல்லி இருக்கிறார். பாண்டியன், ராஜாதி ராஜா, முத்து, அண்ணாமலை, படையப்பா படங்களில் முக்கிய வேடங்களில் ராதாரவி நடித்திருப்பார். எனவே, ரஜினியோடு அவருக்கு நல்ல நட்பு உண்டு.
இதையும் படிங்க: ரஜினி நாலாயிரம் மட்டும் சம்பளமா வாங்கி நடிச்சது இந்த படம்தான்! என்ன கேரக்டர்னு தெரியுமா?..
இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய ராதாரவி முத்து படத்தின் படப்பிடிப்பு நடக்கும்போது காட்சிப்படி ரஜினியை நான் வாடா போடா என்றே அழைப்பேன். ஒருநாள், ஒரு உதவி இயக்குனர் என்னிடம் வந்து ‘சாரை நீங்கள் வாடா போடா என சொல்வது நன்றாக இல்லை. வாப்பா போப்பா என்றாவது சொல்லுங்கள்’ என சொன்னான்.
உடனே நான் ரஜினியிடம் சென்று ‘நான் உங்களை வாடா போடா என அழைப்பதில் உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா?’ எனக்கேட்டேன். ரஜினியோ ‘அதெல்லாம் ஒன்றுமில்லை. யார் சொன்னது?’ என கேட்டார். நான் விஷயத்தை சொன்னதும் ‘யாரோ என்னமோ சொல்லிபோறாங்க விடுங்க’ என சொல்லிவிட்டார்’ என ராதாரவி சொல்லிவிட்டார்.