Connect with us
Karthi

Cinema History

கார்த்தியோட ஆசை நடிகராவதே இல்லையாம்… அப்புறம் எப்படி ஹீரோவானாரு தெரியுமா?

80களில் நடிகர் சிவகுமார் தமிழ்த்திரை உலகில் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக மின்னியவர். இவரது நடிப்பு இயல்பாக இருக்கும். பொதுவாக தாய்மார்களைக் கவரும் விதத்தில் இருக்கும். இவரது வாரிசுகள் சூர்யா, கார்த்தி. இருவருமே தற்போது முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டுள்ளனர். அவர்களில் நடிகர் கார்த்தி சினிமாவில் ஹீரோவானது எப்படி என்று பார்ப்போம்.

படம் நடிக்கணும், ஹீரோவாகணும்கற எண்ணத்தோட கார்த்தி சினிமாவுக்குள் வரவில்லையாம். அவர் உதவி இயக்குனராக வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இருந்தாராம். அப்படி ஒரு வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. மணிரத்னம் இயக்கத்தில் சூர்யா நடித்த ஆய்த எழுத்து படத்தில் அவர் தான் உதவி இயக்குனர். அந்தப் படத்திற்கு சூர்யாவின் தம்பியாக நடிக்க ஒருவர் தேவைப்பட்டுள்ளார்.

அதற்கு கார்த்தியிடமும் கேட்டார்களாம். அவர் தனக்கு நடிக்க விருப்பமில்லை என்றாராம். அதன்பிறகு டைரக்டர் மணிரத்னத்திடம் இந்தப் படத்தில் உங்களுடன் நான் உதவி இயக்குனராக பணிபுரிய விரும்புகிறேன். சேர்த்துக் கொள்வீர்களா என கேட்டாராம். உடனே சரி என்று சொல்லி விட்டாராம் மணிரத்னம்.

Pauthi veeran

Pauthi veeran

அதன் பிறகு ஒரு முறை இயக்குனர் அமீர் கார்த்தியிடம் கதை சொல்ல வந்தாராம். அவர் இயக்கிய மௌனம் பேசியதே படம் ஹிட்டாக இருந்ததால் சரி என்று கதை கேட்டாராம் கார்த்தி. கதையும் பிடித்துவிடவே நடிக்க சம்மதித்து விட்டாராம். அப்படி வந்த படம் தான் பருத்தி வீரன்.

அதன்பிறகு அவருக்குப் பல பட வாய்ப்புகள் வரவே தன் திறமையைக் கொண்டு தனக்கென ஒரு தனியடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.

குறும்புத்தனமும், நக்கலும் கலந்த அவரது வித்தியாசமான நடிப்பு தமிழ்சினிமா ரசிகர்களைக் கவர்ந்தது. அதனால் அவர் நடித்த சிறுத்தை, ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, அலெக்ஸ் பாண்டியன், மெட்ராஸ், கொம்பன், தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, கடைக்குட்டி சிங்கம் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

 

google news
Continue Reading

More in Cinema History

To Top