சார்பட்டா நடிகரின் மனைவி இந்த நடிகையா? இரண்டு முறை விவாகரத்து..மூன்றாவதாக காதல் திருமணம்

Published on: May 27, 2024
john
---Advertisement---

John Kokkain: சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் மக்கள் மனதில் ஒரு நீங்கா இடம் பிடித்த நடிகர் ஜான் கொகேன். இந்த படத்தில் ஒரு சிறந்த பாடி பில்டராக ஆர்யாவுக்கு எதிர்ப்பக்கம் போட்டியிடுபவராக நடித்து ஒட்டுமொத்த மக்களின் வரவேற்பை பெற்றார் ஜான் கொகேன். அந்த படத்திற்கு பிறகு அவருக்கு கிடைத்த ஒரு அரிய வாய்ப்பு அஜித்தின் நடித்த துணிவு படத்தில். அந்த படத்தில் அவர் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

அதை போல் கே ஜி எஃப் படத்திலும் ஒரு சிறந்த கதாபாத்திரத்தில் நடித்து ஒரு தவிர்க்க முடியாத நடிகராக மாறினார். இந்த நிலையில் இவருடைய மனைவி குறித்து தற்போது சோசியல் மீடியாவில் ஒரு செய்தி வைரலாகி வருகின்றது. மனைவி நடிகை மீராவாசுதேவன் என்று சொல்லப்படுகிறது. தென்னிந்திய உலகில் மிகவும் பிரபலமான நடிகையாக ஒரு காலத்தில் வலம் வந்தவர் தான் மீரா வாசுதேவன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஹீரோயினாக நடித்தவர்.

இதையும் படிங்க: முரளி காதல் கதையும் குஷி படமும் ஒன்னா? கல்யாணம் விஷயத்தினை அப்பாவிடமே மறைத்த அம்மா… அடடே!

தற்போது ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அது மட்டும் அல்லாமல் சன் டிவியில் காவிரி என்ற சீரியல் மூலம் முதன் முதலில் சீரியல் தொடரிலும் நடிகர் தொடங்கினார். அதனை அடுத்து பெண், சித்தி 2 ஆகிய சீரியல்களிலும் நடித்து வந்த மீரா வாசுதேவன் முதலில் ஒரு ஒளிப்பதிவாளரின் மகனை திருமணம் செய்து கொண்டாராம்.

அவருடன் ஆறு ஆண்டுகள் வாழ்ந்து பின் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று இருக்கிறார். அதன் பிறகு தான் ஜான் கொகேனுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு அவரை காதலித்து வந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இருப்பினும் அவர்களிடையேயும் மன கசப்பு ஏற்பட்டதால் மீரா வாசுதேவன் ஜான் கொகேனையும் பிரிந்து விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்தார்.

meera
meera

இதையும் படிங்க: உங்க வீட்டில் திருமணமா?… உடனே இங்க வாங்க!.. சிறகடிக்க ஆசை மீனா கொடுத்த ஷாப்பிங் டிப்ஸ்!

இந்த நிலையில் சமீபத்தில் அவர் விப்பின் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டிருக்கிறார். அவர்களது திருமணம் கோவையில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் மிகவும் எளிமையாக நடந்திருக்கிறது. ஜான் கொகேனை பிரித்த பிறகு ஜான் கொகேன் பூஜா என்பவரை திருமணம் செய்து கொண்டு அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இதில் மீரா வாசுதேவன் அறிவுமணி, ஜெர்ரி,கத்தி கப்பல், ஆட்டநாயகன், அடங்க மறு போன்ற படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.