Cinema History
மஞ்சும்மெல் பாய்ஸிடம் மட்டும் பிரச்னை செய்யும் இளையராஜா… குணா படத்தில் செய்த ஏமாற்று வேலை…
Ilayaraja: மஞ்சும்மெல் பாய்ஸ் மற்றும் கூலி படத்திற்கு எதிராக நோட்டீஸ் விட்டிருக்கும் இளையராஜா தன்னுடைய குணா படத்தில் இன்னொரு இசையமைப்பாளரின் பாடலை அவரின் அனுமதி இல்லாமல் பயன்படுத்திய அதிர்ச்சி சம்பவம் தற்போது வெளியாகி இருக்கிறது.
கமல்ஹாசன் நடிப்பில் வெளியான குணா திரைப்படத்தில் சலூன் கடை காட்சியில் 1954ம் ஆண்டு வெளியான “பெண்” திரைப்படத்தில் இடம்பெற்ற கல்யாணம் கல்யாணம் உல்லாசமாகவே உலகத்தில் வாழவே கல்யாணம்… ஆஹா கல்யாணம்….. எனும் பழைய பாடல் ஓடிக்கொண்டே இருக்கும். சின்ன சீனாக செல்லாமல் சலூனில் கடையில் ஓடும் அந்த பாட்டு கமல் ஷேவிங் முடிந்து அங்கிருந்து வெளியேறி சந்தைக்கடை போய் ஒவ்வொரு கடையாக சென்று ஓவர் கோட், குல்லா, கூலிங் கிளாஸ் எல்லாம் வாங்கும்விட்டு சாலையில் கார் ஓட்டி சென்று மலையில் ஏறி அந்த பாழடைந்த சர்ச்க்கு வந்து சேரும் வரைக்கும் ஓடும்.
இதையும் படிங்க: மணிரத்னத்தை தூக்கி சாப்பிட்ட உலக நாயகன்!.. கமலோட வில்லன் கேரக்டருக்கும் ரஜினிக்கும் தொடர்பு?..
கிட்டத்தட்ட சுமார் 2 நிமிடங்கள் அந்த பாடல் பின்னணியில் ஓடிக்கொண்டே இருக்கும். ஆனால் இந்த பாடலின் இசையமைப்பாளரிடம் இளையராஜா அனுமதி வாங்கி இருப்பாரா என யோசித்தால் இங்கு தான் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. குறிப்பிட்ட அந்த பாடலை பாடியது பிரபல காமெடி நடிகர் சந்திரபாபு அவர் 1974ல் இறந்து விட்டார். அப்பாடல் இடம் பெற்ற பெண் திரைப்படத்தினை தயாரித்தது ஏவிஎம் நிறுவனம். ஆனால் அதன் உரிமையாளருமான ஏவி மெய்யப்ப செட்டியார் 1979ல் இறந்து விட்டார்.
அந்த கல்யாணம் பாட்டை எழுதிய கவிஞர் உடுமலை நாராயண கவிக்கூட 1981ல் இறந்து விட்டார். இதில் இன்னொரு அதிர்ச்சியாக அந்த பாட்டை இசையமைத்த ஆர்.சுதர்சனம் 1991ம் ஆண்டு மார்ச் 26ந் தேதி இறந்துவிட்டார். இந்நிலையில், 1991ம் ஆண்டு குணா படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். அந்த வருட நவம்பரில் குணா ரிலீஸ் என்றால் சில மாதங்கள் முன்னரே பாடல் வெளியிடப்பட்டதாம். ஆக பெண் படத்தின் இசையமைப்பாளர் இறந்த பின்னரே அந்த பாடலை குணா படத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது.
இதையும் படிங்க: ரஜினியுடன் இணையும் சத்யராஜ்… மோடி வேடத்தில் நடிக்கப் போகிறாரா? அவரே சொன்ன ‘நச்’ பதில்
அந்த நேரத்தில், அந்த ‘கல்யாணம்’ பாடலுடன் தொடர்புடைய யாருமே 1991ம் ஆண்டு ஏப்ரலுக்கு பின்னர் உயிரோடு இல்லை. படம் ரிலீஸாகி யாரும் அந்த பாட்டுக்கு வந்து உரிமை கொண்டாட முடியாது என்ற நம்பிக்கையில் தான் அதைசெய்து இருக்கிறார். அந்த படத்தில் பல காட்சிகளில் பின்னணி இசையாக பயன்படுத்தி இருக்கிறார் இளையராஜா.
அவர் இசையமைக்கும் படத்தில் அவர் அனுமதி இல்லாமல் இன்னொரு பாடல் பயன்படுத்த மற்றவர்கள் முடிவெடுக்க முடியாது என்பதால் இது சந்தேகத்துக்கு இடமே இல்லாமல் இளையராஜாவின் வேலையாக தான் இருக்கும். இப்போ ராயல்ட்டி பிரச்னையை பேசியவர். ஏன் அப்போது அதை யோசிக்கவே இல்லை எனவும் பேச்சுகள் அடிப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: அடுத்தடுத்து செக் வைக்கும் மலையாள சினிமா! மொத்தமா ஆயிரம் கோடியா? வரலாற்றில் இல்லாத ஒரு சாதனை