தல டக்கர்டோய்!.. இது விடாமுயற்சி கெட்டப்பா? இல்லை குட் பேட் அக்லியா?.. அஜித் இவ்ளோ அழகா இருக்காரே!..

Published on: May 28, 2024
---Advertisement---

நடிகர் அஜித்குமாரின் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தல என்கிற பட்டம் தனக்கு வேண்டாம் என அஜித் சொல்லிய நிலையிலும், அஜித்தை இப்படி ஒரு தோற்றத்தில் பார்த்த ரசிகர்கள் “ தல டக்கர் டோய்” என்றே கமெண்ட் போட்டு வருகின்றனர்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் விட முயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு இன்று அல்லது நாளை அஜர்பைஜானில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதற்காக நடிகர் அஜித் மீண்டும் அஜர்பைஜானுக்கு புறப்பட்டு சென்றுள்ளதாக கூறுகின்றனர்.

இதையும் படிங்க: அடக் கருமம் புடிச்சவனே!.. பிரபல நடிகைகளின் பிட்டு படங்களை தேடிய ஐபிஎல் வீரர்!.. வசமா சிக்கிட்டாரே!..

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேக் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், அந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் இணை எதிர்பார்க்கப்பட்டது. ஒரு சில நாட்கள் அந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், லைகா நிறுவனம் அஜித் தரப்பிலும் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் விடாமுயற்சி படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பை ஜூலை மாதம் இறுதிக்குள் முடித்து விட வேண்டும் என நடிகர் அஜித் கண்டிஷன் போட்டு நடிகர் சம்மதித்து இருப்பதாக கூறுகின்றனர்.

ஆகஸ்ட் மாதம் முதல் குட் பேக் அக்லி படத்தின் படப்பிடிப்புக்கு அஜித் புறப்பட்டு வந்து விடுவார் என்றும் கூறுகின்றனர். இடைப்பட்ட பிரேக்கில் தனது லுக்கை செம சூப்பராக அஜித் மாற்றிவிட்டார் என்றும் இதே லுக்கில் படங்களில் நடித்தால் பாக்ஸ் ஆபிஸ் நேற்று நடத்துவார் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க: இளையராஜாவோட மீண்டும் இணைந்து நல்ல பாடல்களை கொடுப்பீங்களா?.. ஒரு செகண்ட் கடுப்பான வைரமுத்து!..

விஜய்யின் வெற்றிடத்தை பயன்படுத்தி முதலிடத்தை யாருக்கும் விட்டுக் கொடுக்க கூடாது என்பதில் அஜித் தீவிரம் காட்டி வருவதாக பேச்சுக்கள் சினிமா வட்டாரத்தில் அடிபட்டு வருகிறது. குட் பேட் அக்லி படத்தை முடித்துவிட்டு மோகன் ராஜா இயக்கத்தில் ஒரு படமும், சுருதி சிவா இயக்கத்தில் ஒரு படமும் அஜித் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.