Connect with us

Cinema News

ஓவர் சத்தமா இருக்கே… எல்லா பிரச்னையும் எதுக்கு முத்து, மீனாக்கே வருது… கதைய மாத்துங்கப்பா!..

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் காசை வாங்கிக்கொள்ளும் சுதா எல்லாம் அந்த முத்துவால் தான் எனக் கொளுத்திவிட்டு செல்கிறார். மனோஜ் எதுக்கு அவங்க தான் காசு வேண்டாம்னு சொன்னாங்களே எனக் கேட்க அவங்க சொல்லுவாங்க. நாம அப்படி இருக்க முடியுமா? அப்புறம் ஸ்ருதிக்கிட்ட எனக்கு எப்படி மரியாதை இருக்கும்.

உனக்கு ஏது அவ்வளோ காசு என மனோஜ் கேட்க தன்னுடைய தாலி செயினை எடுத்து காட்டுகிறார். நீ என் புருஷன் உன்னை எங்கையும் அவமானப்பட விடமாட்டேன் என்கிறார். வீட்டுக்கு வரும் மனோஜ் மற்றும் ரோகிணி அங்கிருப்பவர்களிடம் நடந்தவற்றை கூறுகின்றனர். அந்த காசை டீலரிடம் கொடுத்ததையும் அதற்காக ரோகிணி தாலியை அடமானம் வைத்ததையும் கூறுகிறார் மனோஜ்.

இதையும் படிங்க: அடக் கருமம் புடிச்சவனே!.. பிரபல நடிகைகளின் பிட்டு படங்களை தேடிய ஐபிஎல் வீரர்!.. வசமா சிக்கிட்டாரே!..

இதை பார்க்கும் விஜயா என் மருமக மஞ்சள் கயிற்றோட இருக்காலே என வருத்தப்படுகிறார். முத்துவை பார்த்து என் அவமானப்படுத்த தானே இப்படி செஞ்ச என மனோஜ் சண்டைக்கு வர அண்ணாமலை சத்தம் போட்டு இருவரையும் அமைதிப்படுத்துகிறார். முத்துவிடம் இது கூட்டு குடும்பம் நீனா தனியா முடிவெடுத்தது தப்பு. இனிமே இப்படி செய்யாத என கூறிவிடுகிறார். கிச்சனில் இருக்கும் முத்துவிடம் மீனா நீங்க செஞ்சது தப்புதான் என்கிறார்.

நான் என்ன தப்பு செஞ்சேன் என அவர் கேட்க, அவங்க எந்த பிளான்ல அந்த பிரச்சினையை தொடங்கி வைத்தார்களோ அதை நீங்க சரியா செஞ்சிருக்கீங்க எனக் கூறுகிறார்.  நாம எப்போது விழுகும், நம்மள அசிங்கப்படுத்த நிறைய பேர் காத்திருக்காங்க. கோவத்தை தள்ளி வச்சிட்டு பொறுமையா யோசிங்க என்கிறார். பின்னர், ரவி மற்றும் ஸ்ருதி இருவரும் ரூமில் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

முத்து பண்ணது தப்புதான் என்கிறார் ரவி. ஸ்ருதி ஆச்சரியமாக நீயா இப்படி சொல்ற எப்பையும் அவருக்கு சப்போர்ட் செய்வ எனக் கேட்க அவன் அனுப்புனும் நினைச்சது சரி தான். அதுக்கு அவனா பேசுனது தப்புதான் என்கிறார். ஆனா உங்க அம்மா செஞ்சதும் சரியில்லை என்கிறார். அவங்க அனுப்புறேனு யார் கிட்டையும் சொல்லலை. சர்ப்ரைஸா அனுப்பிருப்பாங்க என ஸ்ருதி கூற அது உனக்கு மட்டும் செய்யலாம்.

இதையும் படிங்க: இளையராஜாவோட மீண்டும் இணைந்து நல்ல பாடல்களை கொடுப்பீங்களா?.. ஒரு செகண்ட் கடுப்பான வைரமுத்து!..

இந்த வீட்டுக்குள்ள வரும்போது அப்பாக்கிட்ட பேசிருக்கணும் என்கிறார். எனக்கும் புரியுது என ஸ்ருதி கூற இதை நீ ஏன் வெளியில் சொல்லலை என்கிறார் ஸ்ருதி. உனக்கு தர்மசங்கடமா இருக்கும் தானே என்கிறார். சந்தோஷமாக ஸ்ருதி அவரை கட்டிக்கொள்கிறார். அண்ணாமலையிடம் வரும் விஜயா இந்த வீட்டில் முத்துவால் தான் பிரச்சனை. அவங்களை வெளியில குடி வெச்சிடலாம் என்கிறார். இப்ப கூட நமக்காக அவங்க அட்ஜஸ்ட் பண்ணிட்டு தான் இருக்காங்க என அண்ணாமலை பதிலடி கொடுக்கிறார்.

 உடனே நம்ம மருமக ரோகிணிக்கு தாலி செயின் வாங்கணும் என விஜயா கூற அது அவ புருஷன் பிரச்னை. அவன் வாங்கி கொடுத்துப்பான் என்கிறார் அண்ணாமலை. அதுவரை ரோகிணி மஞ்சள் கயிறோடு தான் இருக்கணுமா? நம்ம கௌரவம் என்னாகிறது எனக் கேட்க இத்தனை நாளா மீனா கயிறோடு தான் இருக்கா அப்போ உன் கௌரவம் எங்க போச்சு என பதிலடி கொடுப்பதுடன் இன்றைய எபிசோடு முடிந்தது.

இதையும் படிங்க: தல டக்கர்டோய்!.. இது விடாமுயற்சி கெட்டப்பா? இல்லை குட் பேட் அக்லியா?.. அஜித் இவ்ளோ அழகா இருக்காரே!..

author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top