
Cinema News
160 நாட்கள் ஷூட்டிங் போகாத சிம்பு!.. சம்பளத்தில் கை வைத்த தயாரிப்பாளர்!.. இதெல்லாம் தேவையா?!..
Published on
By
நடிகர் சிம்பு படப்பிடிப்பு சரியாக போக மாட்டார்.. சில சமயம் தாமதமாக போவார்.. சில நாட்கள் போகவே மாட்டார் என்கிற குற்றச்சாட்டு அவரின் மீது பல வருடங்களாக இருந்தது. காரணம் பேசிக்கலி அவர் கொஞ்சம் சோம்பேறி என்பதுதான். இரவில் தாமதமாக தூங்கிவிட்ட காலையில் லேட்டாக எந்திரிப்பது சிம்புவின் வழக்கம்.
எனவே, காலை 7 மணிக்கு படப்பிடிப்புக்கு போவதெல்லாம் அவருக்கு செட் ஆகாது. ஆனால், கோலிவுட்டில் பல இயக்குனர்கள் காலை 7 மணிக்கு முதல் காட்சியை எடுத்துவிடுவார்கள். சிம்பு இப்படி சொதப்புவதால் படப்பிடிப்பு நடக்கும் நாட்கள் திட்டமிட்டதை விட அதிகரித்துகொண்டே போகும்.
இதனால், தயாரிப்பாளருக்கு அதிக செலவாகும். ஆனால், இதையெல்லாம் சிம்பு கண்டுகொள்வதே இல்லை. பெரிய இயக்குனர்கள் என்றால் வாலை சுருட்டிகொண்டே போய்விடுவார். அதுவே சின்ன இயக்குனர்கள் என்றால் கதற விட்டு விடுவார். அதனால்தான் திறமை இருந்தும் தொட வேண்டிய உச்சத்தை இதுவரை தொடாமலேயே சிம்பு இருக்கிறார். மாநாடு படத்திற்கு அட்வான்ஸ் வாங்கி 7 மாதம் கழித்துதான் ஷுட்டிங் போனார் சிம்பு.
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் சிம்பு பண்ணிய சொதப்பலில் அப்படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு 10 கோடிக்கும் மேல் நஷ்டமானது. இப்போதுவரை தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்து சிம்புவிடம் நஷ்ட ஈட்டை வாங்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார். ஆனால், சிம்பு கொடுக்கவில்லை.
simbu
சிம்பு நடித்த வல்லவன் படத்தை தயாரித்தவர் தேனப்பன். இந்த படத்தை இயக்கியதும் சிம்புதான். இந்த படத்தில் நடிக்கும்போதுதான் நயன்தாராவுடன் சிம்புவுக்கு காதல் கசிந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு நடக்கும்போது பல நாட்கள் படப்பிடிப்பு போகமாட்டாராம் சிம்பு. எல்லோரும் படப்பிடிப்பு வந்தாலும் சிம்பு வரமாட்டார். ஆனாலும் எல்லோருக்கும் சாப்பாடு போட வேண்டும். இப்படி மட்டும் 160 நாட்கள் போகாமல் இருந்திருக்கிறார் சிம்பு.
இதையெல்லாம் கணக்குபோட்டு வைத்திருந்த தயாரிப்பாளர் சிம்புவின் சம்பளத்தில் கழித்துக்கொண்டு கொடுக்க அதுவும் பஞ்சாயத்து ஆனது. சிம்பு தனது தவறையெல்லாம் புரிந்து இப்போது தன்னை மாற்றிக்கொண்டிருக்கிறார். மணிரத்னம் இயக்கிவரும் தக் லைப் படத்திற்கு அதிகாலையே போய் சர்ப்பரைஸ் கொடுக்கிறாராம் சிம்பு.
STR49 : வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்க ஒரு புதிய படத்தின் வேலைகள் 2 மாதங்களுக்கு முன்பு துவங்கியது. இந்த...
TVK Vijay: கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருப்பவர் விஜய். ஜனநாயகன் படத்திற்கு இவர் வாங்கிய சம்பளம் 225 கோடி...
Vijay: தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது அவர் ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப்...
Idli kadai: சில சமயம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் நடித்து புதிதாக ரிலீசான திரைப்படத்தை விட அந்த படத்தோடு வெளியான...
Vijay: கரூரில் 41 உயிர்கள் என்பது சாதாரண விஷயம் இல்லை. ஆனால் விஜய் மீதான விமர்சனம், தாக்குதல் நடந்து கொண்டேதான் இருக்கின்றது....