கெட்டப்களில் அசத்தும் கமல், விக்ரம்! இவர்களை மிஞ்சிய ஒரு நடிகர்.. தள்ளாடும் வயசிலயும் கெட்டிக்காரர்தான்

Published on: May 29, 2024
kamal
---Advertisement---

Kamal Vikram: தமிழ் சினிமாவில் விதவிதமான கெட்டப்புகள் போட்டு நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகர் கமல்.ஆரம்பத்திலிருந்து இவருடைய படங்களில் வித்தியாசமான வேடமேற்று மக்களை அசத்துவதில் வல்லவ.ர் கெட்டப்பையும் தாண்டி அப்பவே மூன்று ,நான்கு வேடங்களில்  நடித்து அசத்தியவர் கமல்.

மைக்கேல் மதன காமராஜர் படத்தில் நான்கு வேடங்களில் நடித்து அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்திருப்பார். அந்த படம் இப்பொழுது பார்த்தாலும் மிகவும் ரசிக்கும்படியாக அமைந்திருக்கும். முழு நேர காமெடி படமாக அமைந்த மைக்கேல் மதன காமராஜன் திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. கமலுக்கு அடுத்தபடியாக விக்ரம் அந்த ஒரு இடத்தை பூர்த்தி செய்து வருகிறார்.

இதையும் படிங்க: சிம்பு நடிக்க இருந்த மாஸ்ஹிட் படத்தினை தட்டிவிட்ட தனுஷ்… இது பொறாமை ப்ரோ…

இவரும் தான் நடிக்கும் படங்களில் விதவிதமான கெட்டப்புகள் போட்டுக் கொண்டு படத்திற்காக தன்னையே மிகவும் வருத்திக்கொண்டு நடிக்கிறார் விக்ரம். அவருடைய நடிப்பில் தங்கலான் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுவரை இல்லாத கெட்டப்பில் இந்த படத்தில் நடித்திருக்கிறார் விக்ரம். இப்படி கெட்டப் மன்னர்களாக கமலும் விக்ரமும் வலம் வந்து கொண்டிருக்கையில் பாலிவுட்டில் அமிதாப் ஒரு பக்கம் ஆச்சரியப்படுத்தி வருகிறார்.

அவர் நடித்த பா என்ற திரைப்படம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். பால்கி இயக்கத்தில் அமிதாப், வித்யா பாலன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான். அதில் அமிதாப்புக்கு அம்மாவாக வித்யா பாலன் நடித்திருப்பார். மொட்டை தலையுடன் குள்ளமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அமிதாப்பின் மேக்கப் குறித்து பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க: அஜித் அந்த மாதிரி படத்துல நடிச்சா தியேட்டர் பிச்சுக்கும்! நடிப்பாரா? பார்த்திபன் சொன்ன தகவல்

இந்த படத்திற்கு முதலில் மேக்கப் டெஸ்ட் எடுக்க வேண்டும் என பால்கி அமிதாப்பிடம் கூற டெஸ்ட் எல்லாம் எடுத்து ஓகே பண்ணி இருக்கிறார்.  படத்திற்கு ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம். லுக் டெஸ்ட் எடுக்கும் போது ஸ்ரீராம் அப்போது இல்லையாம். மறுநாள் ஸ்ரீராம் படத்தை எடுக்கும்போது வித்யா பாலனுக்கு அமிதாப் மிகவும் உயரமாக தெரிந்திருக்கிறார். அதனால் இன்னொரு லுக் டெஸ்ட் எடுக்கலாமா என கேட்டிருக்கிறார்.

ami
ami

அதற்கு எந்த ஒரு மறுப்பும் சொல்லாமல் ஓகே சொல்லி இருக்கிறார். இதில் என்ன ஆச்சரியம் என்றால் ஒரு தடவை அந்த மேக்கப் போடுவதற்கு கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் ஆகுமாம். படப்பிடிப்பு காலை ஆறு மணியிலிருந்து எட்டு மணி வரைக்கும். அதன் பிறகு மாலை 4 மணியிலிருந்து ஆறு மணி வரைக்கும் நடக்குமாம். இதில் காலை ஆறு மணி படப்பிடிப்பு ஆரம்பமாகிறது என்றால் அதற்கு முன்னதாக ஆறு மணி நேரத்திற்கு முன்பே அவர் மேக்கப் போட உட்கார வேண்டும்.

இதையும் படிங்க: 160 நாட்கள் ஷூட்டிங் போகாத சிம்பு!.. சம்பளத்தில் கை வைத்த தயாரிப்பாளர்!.. இதெல்லாம் தேவையா?!..

அதன் பிறகு மாலை 4 மணி படப்பிடிப்பு என்றால் முதல் காட்சி படப்பிடிப்பு முடிந்த உடனேயே அடுத்த மேக்கப்பிற்கு ஆறு மணி நேரம் அமிதாப் உட்கார வேண்டும்.இருந்தாலும் எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்காமல் அடுத்த லுக் டெஸ்ட்டுக்கும் ஓகே என சொல்லி இருக்கிறார். இப்படி ஒரு நாளைக்கு 12 மணி நேரம் மேக்கப் போட்டி நடித்தவர் அமதாப் என சித்ரா லட்சுமணன் கூறினார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.