பழைய பியட் காரு வாங்க 2 சூப்பர்ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர்… இப்படி எல்லாமா நடந்தது?

Published on: May 28, 2024
Rajni, Kamal
---Advertisement---

சிவாஜி, கமல், ரஜினி போன்ற பல முன்னணி நட்சத்திரங்களை இயக்கிய பில்லா கிருஷ்ணமூர்த்தியிடம் பல ஆண்டுகளாக உதவி இயக்குனராக இருந்தார். அதன் பிறகு தயாரிப்பாளராக உயர்ந்தார். அவர் தான் சுந்தரி பிலிம்ஸ் முருகன்.

சத்யராஜ், பிரபு, கார்த்திக், ஜெயராம், விமல் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து பல படங்களைத் தயாரித்துள்ளார். இவர் பிரபுதேவா, விஜயுடன் இணைந்து பணியாற்றிய படம் போக்கிரி. தனது திரையுலக அனுபவங்களை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனுடன் இவ்வாறு பகிர்ந்துள்ளார்.

பில்லா கிருஷ்ணமூர்த்தி சூட்டிங் முடிச்சி யாரையும் பார்க்க மாட்டாரு. வீட்டை விட்டு வெளியே போக மாட்டாரு. யாருக்கிட்ட போயும் சான்ஸ் கேட்க மாட்டாரு. ஒரு கதை சொல்றேன். எனக்கு சான்ஸ் கொடுங்கன்னு கேட்க மாட்டாரு. எனக்கு தெரிஞ்சி அவருக்கு வந்தது எல்லாம் வீடு தேடி வந்த படங்கள். காசை டிமாண்ட் பண்ண மாட்டார்.

இதையும் படிங்க…  நான் ஐஷுவை காதலிக்கிறேனா? அடுத்த வீட்டு கதை நமக்கு எதுக்கு… கறாராக பேசிய பிக்பாஸ் நிரூப்…

மேஜர் சுந்தரராஜன் சாருக்கு கற்பகம் வந்தாச்சு படம் பண்ணும்போது அவருக்கு ஒரு லட்ச ரூபாய் சம்பளம். எனக்கு சம்பளம் நாலாயிரம் ரூபாய். டைரக்டருக்கு 25 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தாரு. எனக்கு 1000 ரூபா அட்வான்ஸ் கொடுத்தாரு.

படம் புல்லா முடிச்சி டப்பிங் முடிச்சிக் கொடுத்துட்டு வந்துட்டோம். நான் சினிமாவே வேணாம்னு வீடியோ கடைக்கு வந்துட்டேன். திடீர்னு என்னைத் தேடி வந்தாரு. படத்தை ரிலீஸ் பண்ணலாம்னு இருக்கேன்னு சொன்னார். இல்லப்பா உனக்கு 3000 ரூபா பாக்கி. கிருஷ்ணமூர்த்திக்கு 75 ஆயிரம் கொடுக்கணும்னு சொன்னேன். எனக்கு பத்து பைசா வேணாம் சார். நீங்க படத்தை ரிலீஸ் பண்ணுங்கன்னு சொல்லிட்டேன். அதே மாதிரி டைரக்டரும் பணம் வேணாம்னு சொல்லிட்டாரு.

பில்லா கிருஷ்ணமூர்த்தி ஒரு விஷயம் சொன்னாரு. பாலாஜி அண்ணன்கிட்ட ஒர்க் பண்ணும்போது அவர் பியட் கார் வச்சிருந்தாரு. அதுல தான் போவார். இந்தக் கார் எப்படி வாங்கினீங்க சார்னு கேட்டேன். இது நான் வாங்கல. பாலாஜி அண்ணன் கொடுத்த காருப்பா இதுன்னு சொன்னார்.

இதையும் படிங்க… அஜித் அந்த மாதிரி படத்துல நடிச்சா தியேட்டர் பிச்சுக்கும்! நடிப்பாரா? பார்த்திபன் சொன்ன தகவல்

இந்தக் காரை நான் வாங்கறதுக்கு ரெண்டு படம் வேலை செஞ்சிருக்கேன்னு சொன்னார். அது என்னன்ன படம்னு கேட்டேன். ஒண்ணு பில்லா, இன்னொன்னு வாழ்வே மாயம்னு சொன்னாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பில்லா மற்றும் வாழ்வே மாயம் படங்களைத் தயாரித்தவர் சுரேஷ் பாலாஜி என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டுமே சூப்பர்ஹிட் படங்கள். ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் பேசப்பட்டு வரும் மறக்க முடியாத படங்கள்.