நான் ஐஷுவை காதலிக்கிறேனா? அடுத்த வீட்டு கதை நமக்கு எதுக்கு… கறாராக பேசிய பிக்பாஸ் நிரூப்…

Published on: May 28, 2024
---Advertisement---

Niroop: பிக்பாஸ் சீசன் ஐந்தில் கலந்துக்கொண்ட நிரூப்பிற்கும் கடந்த சீசன் தமிழ் பிக்பாஸில் கலந்துக்கொண்ட ஐசுக்கும் காதல் இருப்பதாக வதந்திகள் பல நாட்களாக இருந்த நிலையில் தன்னுடைய விளக்கத்தினை வீடியோ ஒன்றில் நிரூப் வெளியிட்டு இருக்கிறார்.

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் சண்டை எந்த அளவுக்கு இருக்கிறதோ ஒவ்வொரு சீசனிலும் காதல் ஜோடிகள் உருவாகிக்கொண்டிருப்பது வழக்கமாக இருக்கிறது.  ஆனால்  புதிய சுவாரசியமாக நிரூப் நந்தகுமார் முன்னாள் காதலிகள் ஒவ்வொரு சீசனிலும் கலந்து கொண்டதாக மீம்கள் பரவலாக வரத் துவங்கியது.

இதையும் படிங்க: பாக்கியராஜ் படத்தில் சிவாஜி நடிக்க இதுதான் காரணமாம்..! மனுஷனுக்கு எவ்ளோ பெரிய மனுசு..!

நிரூப் நந்தகுமார் சினிமா மாடல். சமீபத்தில் வெளியான தலைமை செயலகம் வெப் சீரிஸில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அவர் ஏற்கனவே யாஷிகாவுடன் காதலில் இருந்தவர். ஒரு வீடியோவில் அவரை கிஸ் செய்து அது பெரிய அளவில் வைரலானது. இதனைத் தொடர்ந்து இருவருக்கும் ப்ரேக்கப் ஆனதாம்.

ஆனால் யாஷிகாவிற்கு முன்னரே நிரூப் அபிராமி வெங்கடாசலத்தினை காதலித்து இருக்கிறார். ஆனால் இருவருக்கும் நிறைய பிரச்னை உருவாகி அவர்கள் பிரிந்ததாக கூறப்பட்டது. ஆனால் இந்த ரெண்டு காதல் குறித்து நிகழ்ச்சியிலேயே நிரூப் நந்தகுமார் ஓபனாக கூறி இருந்தார்.

இதையும் படிங்க: தனுஷூக்கு வில்லன் S.K. இவருக்கு வில்லன் யாரா இருக்கும்? பிரபலம் போடும் ரூட் இதுதான்..!

இதில் பலருக்கு ஆச்சரியமாக வந்தது. நிரூப்பின் அடுத்த காதலி குறித்த விஷயம் தான். பிக் பாஸ் கடந்த சீசனில் கோரியோகிராபர் அமீரின் தங்கையான ஐசு கலந்து கொண்டார். அவர் நிகழ்ச்சியில் இருக்கும் போது தனக்கு ஒரு காதலர் இருப்பதாகவும் அவரும் சினிமா உலகத்தை சேர்ந்தவர் எனவும் கூறியிருந்தார். அதை பார்த்த ரசிகர்கள் இது நிரூப் நந்தகுமார் தான் என பேச தொடங்கினர்.

ஒரு கட்டத்தில் நிரூப்பின் அடுத்த காதலி ஐஸுதான் என இவர்கள் குடும்பமாக கொண்டாடிய சில வீடியோக்களை எடுத்து வைரல் ஆக்கினர். இது குறித்த நெருப்பிடம் ஒரு பேட்டியில் கேட்டபோது, அவ எங்கேயோ ஊட்டியில் இருக்கா? நான் இங்க இருக்கேன். எனக்கு அவளை தெரியும் அவ்வளவுதான். எங்களுக்குள் வரை எதுவும் இல்லை. இப்படி அடுத்த வீட்டு விஷயத்தை பார்க்காம, உங்க வீட்ல நடக்கிறத பாருங்க. இதெல்லாம் ஒரு விஷயம்னு பேசிக்கிட்டு இருக்கீங்களா எனவும் கலாய்த்து இருக்கிறார்.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.