Connect with us

Cinema News

கோட் கூட எல்லாம் போட்டியில்லை!.. சிவகார்த்திகேயனின் அமரன் எந்த தேதியில் ரிலீஸ் ஆகுது தெரியுமா?..

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடித்துள்ள அமரன் திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்த நிலையில் அந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் சாதாரண காமெடியனாக உள்ளே நுழைந்து தொகுப்பாளராக மாறி சில ஆண்டுகள் விஜய் டிவியில் தொடர்ந்து பணியாற்றிய சிவகார்த்திகேயன் மெரினா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதையும் படிங்க: பின்வாங்குற பேச்சுக்கே இடமில்லை!.. அதிரடி காட்டும் தனுஷ்.. ராயன் படத்தின் மாஸ் அப்டேட் இதோ!..

தனுஷ் நடித்த 3 படத்தில் நடித்த சிவகார்த்திகேயன் எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ரஜினிமுருகன் என வரிசையாக பல வெற்றிப் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக மாறினார்.

மிஸ்டர் லோக்கல், சீமராஜா படங்கள் சொதப்பிய நிலையில் நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு முதல் 100 கோடி படமாக மாறியது. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான டான் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்தது.

இதையும் படிங்க: பாலிவுட் ஸ்டைலில் மாஸ் காட்டும் நாட்டாமை மகள்… கல்யாணம் எப்போ, எங்க தெரியுமா?

அதே வேகத்தில் பிரின்ஸ் படத்தை வெளியிட்டு கல்லா கட்டலாம் என நினைத்த சிவகார்த்திகேயனுக்கு பலத்த அடி விழுந்தது. மாவீரன் திரைப்படம் 80 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது. இந்த ஆண்டு வெளியான அயலான் திரைப்படம் 70 கோடி வசூல் செய்தது. உனக்கு படத்தின் பட்ஜெட் அதைவிட அதிகம் என்பதால் படம் நஷ்டம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் மீண்டும் மிகப்பெரிய கம்பேக் கொடுக்க வேண்டிய சூழலில் உள்ளார். விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் படம் செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் அந்த படத்துக்கு போட்டியாக அமரன் படம் வெளியாவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லை என்றும் அமரன் திரைப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி ரிலீசாக உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

இதையும் படிங்க: வேல ராமமூர்த்தியின் ஒருநாள் சீரியல் சம்பளம் இவ்வளவா? அட என்னப்பா இது?

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top