பகத்பாசில் அதை எல்லாமா சொல்வார்? முன்னணி ஹீரோக்களுக்குப் போட்ட சூடா..?

Published on: May 29, 2024
Bagath pasil
---Advertisement---

தமிழ், மலையாளம் படங்களில் மாபெரும் சூப்பர்ஹிட்டுகளைக் கொடுத்தவர் நடிகர் பகத்பாசில். இவர் பிரபல இயக்குனர் பாசிலின் மகன். இவரைப் பற்றி வலைப்பேச்சு அந்தனன் சுவாரசியமான விஷயத்தைப் பகிர்ந்துள்ளார். வாங்க. பார்ப்போம்.

பகத்பாசில் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு. அவர் காதலுக்கு மரியாதைன்னு அற்புதமான படத்தைக் கொடுத்து விஜயின் லைஃபையே மாற்றி விட்டார். ஒருநாள் ஒரு கனவு படத்தின் சூட்டிங் கொச்சினில் நடந்தது. ஸ்ரீகாந்தோட நான் போயிருந்தேன்.

இதையும் படிங்க… இந்தியன்2 படத்தில் ரொமான்ஸ் செய்யும் சித்தார்த் மற்றும் ரகுல் ப்ரீத்… கமலுக்கு இல்லாத ஸ்பெஷலா?

அங்குள்ள ஏரியில் கல்லில் ஏறி பாடல் காட்சிக்கான சூட்டிங் நடக்குது. நான் ஆர்வக்கோளாறுல கேமராவுக்குப் பின்னால இருந்து ஸ்ரீகாந்தை போட்டோ எடுத்துட்டேன். அப்போ பிளாஷ்சை ஆப் பண்ண மறந்துட்டேன். அப்போ சூட்டிங் நடந்துகிட்டு இருக்கு. பிளாஷ் லைட் அடிச்சா எப்படி இருக்கும்? நான் கையில கேமராவோட நிக்கிறேன். டைரக்டர் ‘கட் கட் கட்’னு சொல்லிட்டாரு. அப்போ அவருக்கு எவ்வளவு கோபம் வரணும்? ஆனால் என்னைப் பார்த்ததும் சூட்டிங் முடிஞ்சதுக்கு அப்புறம் போட்டோ எடுத்துக்கோங்கன்னு சொன்னார்.

அதே இடத்துல வேறொரு டைரக்டரா இருந்தா அசிங்கம் அசிங்கமா திட்டியிருப்பாங்க. எனக்கு பயங்கர குற்ற உணர்ச்சி, அவமானம்… இவ்ளோ பெரிய டைரக்டர் திட்டலையேன்னு ஆச்சரியமா இருந்தது.

இதையும் படிங்க… என் அக்காவுக்கே அழல!.. ஆனா விஜயகாந்துக்காக அழுதேன்!.. உருகும் மக்கள் நாயகன்!..

அப்பேர்ப்பட்டவரோட மகன் பகத்பாசில். அதனால அவர் மீது எனக்கு தனிப்பட்ட அன்பு உண்டு. சமீபத்தில் அவர் ஒரு கருத்து சொல்லியிருந்தார். ரசிகர்கள் சில சமயம் ஒரு எல்லை மீறி செயல்படுவார்கள். அவர்களுக்கு ஒரு பதிவு போட்டு இருந்தார். ‘நீங்க தியேட்டருக்கு வாங்க. டிக்கெட் எடுங்க. படம் பாருங்க. கொண்டாடுங்க. அதைத் தியேட்டர்லயே விட்டுட்டு வந்துருங்க.

அதுக்கு அப்புறம் அவங்களை வேறொரு இடத்துல கொண்டு போய் வைக்கிறது அவசியம் இல்லாத ஒன்று’ என்று சொல்லிவிட்டார். இப்படி திரைத்துறையில் இருந்து கொண்டு இந்த செயலை விமர்சிப்பதற்கு தைரியம் வேண்டும். இந்தக் கருத்துக்கு பல்வேறு நடிகர்கள் மனசுக்குள் புழுங்கி இருப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.