Connect with us

Cinema News

ஓடிடி-யில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட 5 படங்கள்!.. முதலிடத்தில் மாஸ் காட்டும் சலார்…

கடந்த சில வருடங்களாக ஓடிடி என்பது தயாரிப்பாளரை காக்க வந்த கடவுளாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இதற்கு முன் தியேட்டர் மற்றும் தொலைக்காட்சி உரிமைகளை மட்டுமே தயாரிப்பாளர்கள் பெரிதும் நம்பி இருந்தனர். ஆனால், ஓடிடியில் வரும் பணத்தை வாங்கி ஹீரோக்களுக்கே சம்பளம் கொடுக்கலாம் என தயாரிப்பாளர்கள் நினைக்கும் அளவுக்கு புதிய படங்கள் பல கோடிகளுக்கும் விலை போய் வருகிறது.

இதன் காரணமாக பெரிய நடிகர்கள் தங்களின் சம்பளங்களை தாறுமாறாக ஏற்றிவிட்டனர். பெரும்பாலும் அமேசான் மற்றும் நெட்பிளிக்ஸ் ஆகிய 2 நிறுவனங்கள்தான் அதிக விலை கொடுத்து பெரிய படங்களை வாங்குகிறார்கள். இந்நிலையில், ஓடிடி-யில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட 5 படங்கள் பற்றி இங்கே பார்ப்போம்.

இதில் 5வது இடத்தில் இருக்கிறது ரஜினியின் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படத்தில் ரஜினி, ரம்யா கிருஷ்ணன், விநாயகன், தமன்னா, வசந்த ரவி என பலரும் நடித்திருந்தனர். பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்றபின் நெல்சன் திலீப்குமார் இயக்கிய இந்த படத்தை அமேசான் நிறுவனம் 100 கோடி கொடுத்து வாங்கியது. தியேட்டரில் இப்படம் 700 கோடி வரை வசூல் செய்தது.

4வது இடத்தில் இருப்பது அக்‌ஷய் குமார் நடித்து வெளியான லக்‌ஷ்மி. இது தமிழில் ராகவா லாரன்ஸ் நடித்து வெளியான காஞ்சனா படத்தின் ஹிந்தி ரிமேக் ஆகும். இப்படத்தை 120 கோடி கொடுத்து வாங்கியது அமேசான் பிரைம் நிறுவனம். ஆனால், இந்த படம் தியேட்டரிலும் சரி, ஓடிடியிலும் சரி வரவேற்பை பெறவில்லை.

3வது இடத்தில் இடத்தில் இருப்பது பிரபாஸ் ஹீரோவாக நடித்து வெளியான சலார் திரைப்படம். கேஜிஎப் ஹிட்டுக்கு பின் பிரசாந்த் நீல் இயக்கிய திரைப்படம் இது. இந்த படத்தில் பிரபாஸ் வசனம் பேசும் காட்சிகள் மிகவும் குறைவு. ஆனாலும், பல பில்டப் காட்சிகள் இடம் பெற்றிருந்து. இந்த படத்தை 160 கோடி கொடுத்து வாங்கியது நெட்பிலிக்ஸ் நிறுவனம்.

2வது இடத்தில் ஷாருக்கானின் ஜவான் படம் இருக்கிறது. அட்லி பாலிவுட்டுக்கு போய் இயக்கிய இந்த படத்தை 200 கோடி கொடுத்து வாங்கியது அமேசான். இந்த வரிசையில் முதலிடத்தில் இருப்பது பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎப் 2. இப்படத்தை அமேசான் நிறுவனம் 300 கோடி கொடுத்து வாங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.

google news
Continue Reading

More in Cinema News

To Top