நாங்க ரெண்டு பேரும் அதுல கில்லாடி! ‘தக்லைஃப்’ படத்தில் சம்பவம் செய்யப் போகும் கமல், சிம்பு

Published on: May 29, 2024
simbu
---Advertisement---

Thug Life Movie: நடிகர் கமல்ஹாசன் மற்றும் மணிரத்தினம் ஆகியோர் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் தக் லைப். நாயகன் படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்குப் பிறகு இணைந்திருக்கும் திரைப்படமாக இந்த தக் லைப் திரைப்படம் மாறி இருக்கிறது. அதனால் இந்த படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது.

நாயகன் திரைப்படம் அந்த நேரத்தில் விமர்சன ரீதியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படமாக அமைந்திருந்தது. இப்போது அதே கூட்டணியில் மற்றும் ஒரு திரைப்படம் எனும்போது இப்ப உள்ள காலகட்டத்திற்கு ஏற்ற வகையில் எந்த மாதிரியான கதைகளத்தில் மணிரத்தினம் கமலை வைத்து படத்தை கொடுக்கப் போகிறார் என்ற ஒரு எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இதையும் படிங்க: புள்ளப்பூச்சியெல்லாம் சூர்யாவுக்கு வில்லனா? ஆண்டவன் மேல பாரத்த போடுவோம்.. வெளியான சூர்யா43 அப்டேட்

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான். படத்தில் ஆரம்பத்தில் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க இருந்தனர். துல்கர் சல்மான், ஜெயம் ரவி போன்ற நடிகர்கள் கூட்டமே இருந்தன. ஆனால் இப்போது அவர்கள் இருவரும் இந்த படத்தில் இருந்து விலக இப்போதைக்கு சிம்பு மட்டுமே இந்த படத்தில் இணைந்து இருக்கிறார்.

கூடவே த்ரிஷா ஹீரோயின் ஆக இந்த படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கையில் சில தினங்களுக்கு முன்புதான் சிம்புவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஹைப்பை உருவாக்கியிருந்தது. கிட்டத்தட்ட மங்காத்தா அஜித் ரேஞ்சுக்கு சிம்புவின் என்ட்ரி படுமாஸாக இருந்திருந்தது  இந்த படத்தில்.

இதையும் படிங்க: தள்ளிப்போகும் தளபதி 69!.. விஜய் நினைப்பது நடக்குமா?!.. பரபர அப்டேட்!…

இந்த நிலையில் தக் லைஃப் படத்தை பற்றிய மற்றும் ஒரு செய்தி இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த படத்தில் கமலும் சிம்புவும் இணைந்து ஒரு குத்துப் பாடலுக்கு நடனமாட போவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை. ஆனாலும் அப்படி ஒரு சம்பவம் மட்டும் நடந்தால் இதைவிட ஒரு பெரிய விருந்து ரசிகர்களுக்கு இருக்கவே முடியாது என்று தான் சொல்ல வேண்டும்.

இருவருக்குமே டான்ஸ் என்பது கைவந்த கலை. அதுவும் கமல் கடைசியாக  இந்த வயதிலேயும் விக்ரம் படத்தில் ஒரு தர லோக்கலான பாடலில் அற்புதமாக நடனம் ஆடியிருப்பார். சிம்புவை பற்றி சொல்லவே வேண்டாம். ஆகவே இருவரும் சேர்ந்து ஆடும் போது ஒரு பெரிய எதிர்பார்ப்பே இருக்கிறது.

இதையும் படிங்க: ஓடிடி-யில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட 5 படங்கள்!.. முதலிடத்தில் மாஸ் காட்டும் சலார்…

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.