Cinema News
அந்த விஷயத்துல சத்யராஜை பார்த்து கொஞ்சம் நடிக்கக் கத்துக்கோங்க… வெளுத்து வாங்கிய பிரபலம்
நடிகர் சத்யராஜ் செமயான லொள்ளு பார்ட்டி தான். நக்கல் பார்ட்டி தான். ஆனாலும் இவ்வளவு நக்கல் ஆகாது என்பது போல சமீபத்தில் நடந்த ஒரு படவிழாவில் பேசி இருக்கிறார். இதுபற்றி பிரபல யூடியூபரும் திரை ஆய்வாளருமான ஆலங்குடி வெள்ளைச்சாமி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
மழை பிடிக்காத மனிதன் படத்தில் டீசர் வெளியீட்டு விழா நடந்தது. விஜய் ஆண்டனி நடித்துள்ளார். படத்தை இயக்கியவர் விஜய் மில்டன். இதுல கலந்து கொண்ட சத்யராஜிடம் நிருபர்கள் 3 கேள்விகளை எழுப்புகின்றனர். அதுல ஒண்ணு நீங்க ரஜினி கூட நடிப்பீங்களா, சல்மான்கானுக்கு இந்தியில வில்லனா நடிப்பீங்களான்னு கேட்டாங்க. அடுத்தது காவி சட்டைக்காரரான மோடி மாதிரி நடிப்பீங்களான்னும் கேட்டாங்க.
இதையும் படிங்க… சத்யராஜ் தேவை இல்லாத ஆணி!.. முந்திரி கொட்டையை வெளியே அனுப்புங்க என ரஜினிகாந்த் ரசிகர்கள் அலப்பறை!..
அப்படி கேட்டதுக்கு இவரு நடிக்க மாட்டேன்னு சொல்லல. கிண்டலா சொல்லிட்டாரு. நடிக்கலாம். ஆனா அதை அப்படியே எடுத்தா நடிக்கலாம். அதுக்கு என் நண்பன் மணிவண்ணன் இருந்தா அவனோட இயக்கத்துல நடிக்கலாம். அதே நேரம் இப்போதைக்கு யாரை வைத்து இயக்கலாம்னு கேட்குறாங்க. பக்கத்துல விஜய் மில்டன் இருக்காரு. அவருக்கிட்ட கேட்காரு. நீங்க எடுக்கறீங்களா நான் நடிக்கிறேன்னு சொல்றாரு.
இல்லேன்னா மாரி செல்வராஜ், பா.ரஞ்சித், வெற்றிமாறன் இயக்குனா நடிக்கலாம்னு சொல்றாரு. அவங்க எடுத்தா வெறும் வில்லத்தனமாகத் தான் இருக்கும். ஏற்கனவே நான் சொல்லிருக்கேன். அமைதிப்படை படத்துல சத்யராஜ் நடிச்சிட்டாரு. அதோட இன்னொரு வெர்சனாகத் தான் இது இருக்க முடியும். அந்த வகையில் செம நக்கலா சொல்லிருக்காரு சத்யராஜ்.
இதுக்கு என்ன அர்த்தம்னா ‘உளுந்து இருந்தால் வடை சுடலாம். எண்ணை இல்ல’ன்னு சொல்றதுக்குச் சமம். ஒரு சில நடிகர்கள் நான் எந்த அமைப்பையும் சார்ந்து நடிக்கல. எல்லாத்தையும் நடிப்பேன்னு நினைக்கிற மாதிரி சொல்றாங்க. நம்ம வாய்ப்பு பறிபோயிடுமோங்கற அச்சத்துல சொல்றாங்க.
இதையும் படிங்க… கடவுளுக்கே என்னைப் பிடிக்கும்… அடங்கப்பா… இது சத்யராஜ் அடித்த அல்டிமேட் லூட்டிப்பா..!
சத்யராஜ் 45 வருஷமா நடிக்கிறாரு. இப்ப வரைக்கும் பிசியாகவே தான் இருக்காரு. தமிழ் மட்டுமல்ல. பல மொழிகளிலும் நடிச்சிக்கிட்டுத் தான் இருக்காரு. அவர் ஒரு அமைப்பு சார்பா, ஒரு நோக்கத்துல இருக்கறதனால வாய்ப்பு குறைஞ்சா போகுது.? இல்லேன்னா ஒரு கொள்கையும் இல்லாம நான் நடிக்கிறேன்னு சொல்றவங்களுக்கு வாய்ப்பு கொட்டியா கிடக்குது. அதனால கொஞ்சம் யோசித்து சத்யராஜ் மாதிரி மக்கள் அரசியல் பேச நடிகர்கள் கத்துக்கிட்டா நல்லா இருக்கும். அது சமூகத்துக்கும் நல்லது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.