மீண்டும் மீண்டுமா? சிவகார்த்திகேயன் வீட்டில் அடுத்த குவா குவா… ஆச்சரியத்தில் ரசிகர்கள்…

Published on: May 30, 2024
---Advertisement---

Sivakarthikeyan: நடிகர் சிவகார்த்திகேயன் வீட்டில் அடுத்த சூப்பர் நியூஸால் அவர் ரசிகர்கள் சந்தோஷமடைந்து இருக்கின்றனர். பல நாட்களாக சிவா குறித்து நெகட்டிவ் நியூஸ்கள் தொடர்ந்து வந்த நிலையில் தற்போது வந்து இருக்கும் தகவலால் ரசிகர்கள் ஆறுதல் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் டிவியில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். அந்த சீசனின் வெற்றியாளராகி தொடர்ச்சியாக விஜய் டிவி ஷோக்களில் கலக்கி வந்தார். அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிய தொடங்கியது. சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வருகிறார். 

இதையும் படிங்க: அந்த விஷயத்துல சத்யராஜை பார்த்து கொஞ்சம் நடிக்கக் கத்துக்கோங்க… வெளுத்து வாங்கிய பிரபலம்

நடிப்புலகில் எண்ட்ரி கொடுத்தாலும் வீட்டில் பார்த்த ஆர்த்தி என்பவரை கல்யாணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு ஏற்கனவே ஆராதனா என்ற மகளும், குகன் தாஸ் என்ற மகனும் இருக்கின்றனர். தற்போது ஆர்த்தி மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கும் வீடியோ கசிந்து வைரலாகி வருகிறது.

சமீபகாலமாக சிவகார்த்திகேயன் குறித்து நெகட்டிவ் விஷயங்களே அதிகமாக வைரலாகி வருகிறது. அந்த வகையில், இந்த செய்தி அவர் மீதான நெகட்டிவ் விமர்சனங்களை குறைக்கும்படி அமைந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதனால் சிவா ரசிகர்கள் இந்த விஷயத்தினை தொடர்ந்து ஷேர் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: அஜித் மாதிரி இருந்தா நாசமாதான் போவ!.. லோகேஷ் கனகராஜை போட்டு பொளக்கும் தயாரிப்பாளர்!..

ராஜ்கமல் நிறுவன தயாரிப்பில் உருவான அமரன் படத்தினை சிவகார்த்திகேயன் சமீபத்தில் முடித்து இருக்கிறார். விரைவில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருக்கும் படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வைரலாகும் வீடியோவைக் காண: https://x.com/CinemaWithAB/status/1796071259366646256

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.