Cinema History
நாகேஷ் பண்ணிய சேட்டை… ஜெய்சங்கர், லட்சுமிக்கு இடையில் இப்படியா செஞ்சாரு?
பிரபல தயாரிப்பாளரும் சினிமா விமர்சகருமான சித்ரா லட்சுமணன் லென்ஸ் நிகழ்ச்சியில் இப்படி ஒரு தகவலைப் பகிர்ந்துள்ளார்.
அன்றைக்கு ஜெய்சங்கர், லட்சுமி இருவரும் இணைந்து நடித்த ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டது. யாரோ எழுதிய காதல் கடிதத்தை லட்சுமி தனக்கு எழுதியதாக நினைத்துக் கொண்டு ஜெய்சங்கர் பாடுவதைப் போன்ற ஒரு பாடல் இது. அந்தப் பாடலின் படப்பிடிப்பு நடுவே, நாகேஷ் ஜெய்சங்கரிடம் இந்த லட்டரை லட்சுமி உங்ககிட்ட கொடுக்கச் சொன்னாங்கன்னு கொடுத்தார். அதைப் படித்துப் பார்த்த ஜெய்சங்கருக்கு அதிர்ச்சி.
இதையும் படிங்க… ஏங்கடா! லட்டு மாதிரி அஜித்-விஜய் படங்கள் கிடைச்சா மிஸ் பண்ணுவேனா? ஷாக் கொடுத்த சாய் பல்லவி!..
காரணம் அது ஒரு காதல் கடிதம். அதன் கீழ் லட்சுமி என கையெழுத்துப் போடப்பட்டு இருந்தது. லட்சுமியை உங்கிட்ட தனியா பேசணும்னு ஜெய்சங்கர் அழைத்தாராம். காதல் கடிதத்தை எழுதி நாகேஷ்ட கொடுத்து அனுப்பிருக்க? நீ செய்றது நல்லாருக்கான்னு ஆத்திரத்துடன் கேட்டுள்ளார்.
லட்சுமிக்கு எதுவுமே புரியவில்லையாம். அதைப் படித்துப் பார்த்ததும் தான் அவருக்கே விஷயம் தெரிந்ததாம். நாகேஷ் எந்தப் படத்தில் இருந்தாலும் இதுபோன்ற குறும்புகளுக்குப் பஞ்சமே இருக்காதாம். இதை லட்சுமியே ஒரு முறை பதிவிட்டுள்ளாராம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நாகேஷைப் பொருத்தவரை படப்பிடிப்பில் மட்டுமல்ல நிஜத்திலும் கலகலப்பானவர். அவர் வந்தாலே அந்த இடம் களைகட்டும்னு சொல்வாங்களே அப்படித்தான் இவரும். அதனால் அவர் என்ன செய்தாலும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க…நாடோடி மன்னன் படத்தை எடுப்போமான்னு கேட்ட விஜயகாந்த்… இது எப்போ நடந்தது?
1971ல் கே.பாலசந்தர் இயக்கிய நூற்றுக்கு நூறு படத்தில் ஜெய்சங்கர், லட்சுமி உடன் இணைந்து நாகேஷூம் நடித்துள்ளார். இந்தப்படத்தில் லட்சுமியின் கேரக்டர் பெயரும் லட்சுமி தான். ரமேஷ் என்ற வேடத்தில் நாகேஷ் நடித்துள்ளார். பிரகாஷாக ஜெய்சங்கர் நடித்துள்ளார்.
ஜெமினிகணேசன் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். உங்களில் ஒருவன் நான், நான் உன்னை வாழ்த்தி, நித்தம் நித்தமொரு, உழைப்புக்கு, பூலோகமா ஆகிய பாடல்கள் உள்ளன. வி.குமார் இசை அமைத்துள்ளார். இது தவிர வீட்டுக்கு வீடு, பெண் தெய்வம் உள்பட பல படங்களில் இந்த மூவரும் நடித்துள்ளனர்.