Cinema News
அதிக முறை தேசிய விருது வாங்கிய நடிகர்கள்!.. சுள்ளானா இருந்தும் சுளுக்கெடுத்த தனுஷ்!…
பாலிவுட், டோலிவுட், கோலிவுட், மல்லுவுட் என எதுவாக இருந்தாலும் எல்லா நடிகர்களுக்கும் இருக்கும் ஆசை தேசிய விருது வாங்க வேண்டும் என்பதுதான். ஆனால், எல்லோருக்கும் தேசிய விருது கிடைப்பது இல்லை. நடிப்பின் இலக்கணம் என பார்க்கப்படும் நடிகர் திலகம் சிவாஜிக்கே தேசிய விருது கிடைக்கவில்லை.
தேசிய விருது கிடைக்க வேண்டுமெனில் அந்த குழுவில் இருக்கும் ஒருவர் அழுத்தமாக ஆதரவு தெரிவிக்க வேண்டும். அதன்பின் ஓட்டெடுப்பு நடத்துவார்கள். யாருக்கு அதிக ஓட்டு கிடைக்கிறதோ அவரே சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்படுவார். 2003ம் வருடம் தேசிய விருது பட்டியலில் பிதாமகன் விக்ரமும், ஒரு ஹிந்தி நடிகரும் இருந்தார்கள். பாலுமகேந்திராதான் விக்ரமுக்கு வாங்கி கொடுத்தார்.
அதேபோல்,1992ம் வருடம் சிறந்த இசைக்கான தேசிய விருதில் இளையராஜா மற்றும் ரோஜா படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் என இருவரும் இறுதிப்பட்டியலில் இருந்தார்கள். பாலுமகேந்திரா யாரை தேர்ந்தெடுக்கிறாரோ அவருக்கே விருது. அவர் ஓட்டு போட்டது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு. ‘முதல் படத்திலேயே ஒருவன் ராஜாவுக்கு போட்டியாக வந்து நிற்கிறான். அவனை பாராட்டும் விதமாகவே அவனுக்கு ஓட்டு போட்டேன்’ என சொன்னார் பாலுமகேந்திரா. இப்படித்தான் தேசிய விருதுகள் தீர்மானிக்கப்படுகிறது.
இந்நிலையில், தென்னிந்தியாவில் அதிகமுறை தேசிய விருதுகளை வாங்கிய நடிகர்கள் பற்றி பார்ப்போம். அதிலும் 4 நடிகர்கள் மட்டுமே அதிக முறை தேசிய விருதை வாங்கி இருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் அனைத்து படங்களையும் சேர்த்து ஒரு நடிகர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
இதில், கேரள உலகில் நடிகர் மம்முட்டி 3 முறை தேசிய விருதுகளை வாங்கியிருக்கிறார். அதேபோல், ரசிகர்களால் உலக நாயகன் என அழைக்கப்படும் கமல்ஹாசன் மூன்றாம் பிறை, நாயகன், தேவர் மகன் ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி 3 தேசிய விருதுகளை வாங்கி இருக்கிறார். ஹிந்தியில் நடிகர் அமிதாப்பச்சன் 4 முறை தேசிய விருதை பெற்றிருக்கிறார். நடிகர்களில் அதிக முறை தேசிய விருது வாங்கியது இவர்தான்.
மம்முட்டி, கமல், அமிதாப்பச்சன் எல்லோருமே சீனியர் நடிகர்கள். ஆனால், இளம் நடிகர்களில் தனுஷ் 3 முறை தேசிய விருது வாங்கி இருக்கிறார். ஆடுகளம் மற்றும் அசுரன் ஆகிய படங்களுக்கு சிறந்த நடிக்கான விருதும், காக்கா முட்டை படத்திற்கு தயாரிப்பாளர் என்கிற முறையில் விருது வாங்கினார். அதேபோல், பிதாமகன் படத்திற்காக விக்ரமுக்கும், சூரரைப்போற்று படத்திற்காக சூர்யாவுக்கும் தேசிய விருது கொடுக்கப்பட்டது. சூரரைப்போற்று படத்துக்கு மொத்தம் 5 தேசிய விருதுகள் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.