அவர பாக்குறதே பெருசு! என் பையன் செஞ்ச காரியத்தால் ஆடிப் போயிட்டேன்.. அஜித்தை பற்றி சூரி

Published on: June 2, 2024
soori
---Advertisement---

Actor Soori: இன்று தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருந்து அதன் பிறகு ஒரு சூப்பர் ஹீரோவாக மாறி இருப்பவர் சூரி. அதிலும் ஒரு ஆக்சன் ஹீரோவாக புது அவதாரம் எடுத்திருக்கிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் கருடன். அந்த படத்தை பார்த்த பலரும் சூரியின் நடிப்பை பாராட்டி வருகிறார்கள். அதற்கு முன் விடுதலை திரைப்படம் தான் அவருடைய நடிப்பை மெருகேற்றிய திரைப்படமாக அமைந்தது.

சூரிக்குள்ளும் ஒரு ஹீரோ இருக்கிறார் என்பதை வெளியே கொண்டு வந்தவர் வெற்றிமாறன். அதை ஒவ்வொரு மேடையிலும் சூரி சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டு வருகிறார். ஆரம்ப காலங்களில் மிகவும் கஷ்டப்பட்டு பல போராட்டங்களைக் கடந்து சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் பந்தயத்தின் அடிப்படையில் பரோட்டா சாப்பிடும் ஒரு சீனில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இதையும் படிங்க:சூப்பர் ஹிட் அடித்த சூரியின் கருடன்!.. சந்தானத்தை கழுவி ஊற்றும் ஃபேன்ஸ்.. வேறலெவல் மீம் பாருங்கோ!..

அதில் இருந்தே பரோட்டா சூரி என அழைக்கப்பட்டார். அந்த படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் சூர்யா கார்த்தி அஜித் என பல நடிகர்களுடன் இணைந்து நடித்து ஒரு முன்னணி நகைச்சுவை நடிகராக வளர்ந்தார். அதன் பிறகு தான் விடுதலை திரைப்படம் அவருக்கு ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த நிலையில் சூரி அஜித்தை சந்தித்துக் கொண்ட ஒரு தகவல் இப்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

அஜித்துடன் இணைந்து சூரி வேதாளம் என்ற திரைப்படத்தில் நடித்திருப்பார். அந்த படத்தின் போது தனது குடும்பத்துடன் வந்து அஜித்தை சந்தித்தாராம் சூரி. தன் மனைவி மகன் என அனைவரும் அஜித்தை சந்தித்து கொண்டதோடு மட்டுமல்லாமல் அவருடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். அந்த புகைப்படம் அந்த நேரத்தில் மிகவும் வைரலானது. அஜித்தும் சூரியும் சந்தித்துக் கொண்ட அந்த சமயத்தில் நடந்த ஒரு சுவாரசிய சம்பவத்தை சூரி பகிர்ந்து இருக்கிறார்.

இதையும் படிங்க: டிரான்ஃபர்மேஷனா இப்படி இருக்கனும்டா! இந்தியன் – இந்தியன்2 அனிருத்தின் வளர்ச்சி.. வைரலாகும் புகைப்படம்

அப்போது சூரியின் மகன் மிகவும் சிறு குழந்தையாக இருந்திருப்பார் .அஜித் மூக்கு கண்ணாடியை சூரியின் மகன் பிடுங்கியதோடு மட்டுமல்லாமல் அதை கீழே போட்டு மிதித்து விட்டானாம். அதை பார்த்ததும் சூரிக்கு பகிரென ஆகிவிட்டதாம். உடனே அந்த பயத்தில் அஜித்தை பார்த்து சூரி சார் மன்னிச்சிடுங்க சார். சின்ன குழந்தை சார். தெரியாம பண்ணிட்டான் சார் என சொல்லி இருக்கிறார் .அதுக்கு அஜித் தெரியாமல் பண்ணா தான் அது குழந்தை என சொல்லி அந்த மூக்கு கண்ணாடியை எடுத்து சூரியின் மகனுக்கு போட்டு விட்டாராம்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.