Connect with us
Bharathiraja

Cinema History

நான் திங்கிற சோறு நீ போடுகின்ற சோறு… பாரதிராஜா யாரை இப்படி சொல்றாருன்னு தெரியுமா?

தமிழ்த்திரை உ லகில் யாரும் தொட முடியாத உச்சத்தில் உள்ளவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்று அனைவருக்கும் தெரியும். அவரது நவரச நடிப்புக்கும் மயங்காதவர்களே இல்லை எனலாம். அவரைப் பற்றி இயக்குனர் இமயம் பாரதிராஜா இப்படி சொல்லி இருக்கிறார்.

நடிகர் திலகம் கல்லூரியில் படிச்சாரா? யாராவது அவருக்கு நவரசத்தைக் கற்றுக்கொடுத்தார்களா? கடவுள் அவருக்கு நவரசத்தைக் கொடுத்தார். எந்த ரசத்தை எங்கே தொட்டால் அது எப்படி பிரதிபலிக்கும் என்று கண்டு பிடித்தது சிவாஜி. உச்சரிப்பு மட்டுமல்ல. அவர் குழந்தை மாதிரி. வினயம் கிடையாது. ஒரு சூது வாது கிடையாது. சத்தியமா சொல்றேன். நடிப்பைத் தவிர அவருக்கு ஒண்ணும் தெரியாது.

இதையும் படிங்க… ராமராஜனுக்கும் ராதாரவிக்கும் இப்படி ஒரு ஒற்றுமையா? இவ்ளோ நாளா தெரியாமப் போச்சே..!

உன்னுடைய வசன உச்சரிப்பைப் பார்த்து உன் நடிப்பைப் பார்த்து நான் சென்னைக்கு வந்தவன். நான் திங்கிற சோறு நீ போடுகின்ற சோறு. நீ இல்லேன்னா நான் சினிமாவில இல்ல. அவரு சொல்வாரு. ‘ஒருவாட்டிப் படி படி’ன்னு என்று நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் டைரக்டர் பாரதிராஜா. அவரு எப்பவும் சினிமாவுல நடிக்கறதுக்கு முன்னாடி ஒரு தடவை நடிச்சிப் பார்த்துட்டு தான் ஷாட்டுக்கே போவாராம்.

Muthal Mariyathai

Muthal Mariyathai

உன்னைக் கடந்து எந்த நடிகனும் நடிக்க முடியாது. இனி வருகின்ற காலத்திலும் சரி. இருக்கின்ற காலத்திலும் சரி. எந்த நடிகனாக இருந்தாலும் சரி. கமலஹாசனாக இருக்கட்டும். உன்னுடைய பதிவு இல்லாமல், உன்னுடைய பாதிப்பு இல்லாமல் யாரும் இருக்க முடியாது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க… ஆறு மணிக்கு மேல கண்ணு தெரியாது!. சீக்கிரம் அனுப்பிடுங்க!.. அதிர்ச்சி கொடுத்த நம்பியார்..

முதல் மரியாதை படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பாரதிராஜா இயக்கத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1985 ல் இந்தப் படம் வெளியானது. சிவாஜி தான் ஹீரோ. ராதா அவருக்கு ஜோடி. சத்யராஜ், வடிவுக்கரசி, ஜனகராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இளையராஜா தான் மியூசிக். பாடல்கள் எல்லாமே சூப்பர்ஹிட். அந்த நிலாவத் தான், பூங்காற்று திரும்புமா, வெட்டிவேரு வாசம், ஏ குருவி, ராசாவே உன்னை நம்பி, ஏ கிளியிருக்கு, ஏறாத மலை மேல, நான் தானே அந்தக்குயில் ஆகிய சூப்பர்ஹிட் பாடல்கள் இந்தப் படத்தில் தான் இடம்பெற்றுள்ளன.

google news
Continue Reading

More in Cinema History

To Top