Cinema History
ஹரா படத்தில் மோகன் நடிச்சதுக்கு காரணம்!.. ‘கம் பேக்’கா… ‘கோ பேக்-கான்னு படம் வந்தாதானே தெரியும்!
80களில் தமிழ்த்திரை உலக சாம்ராஜ்யத்தில் கொடி கட்டிப் பறந்த முன்னணி நடிகர்களில் ஒருவர் மோகன். மைக்கைக் கையில் எடுத்தால் போதும். பாடல்கள் எல்லாமே சூப்பர்ஹிட் தான். அதனால் மைக் மோகன் என்றே ரசிகர்கள் அழைத்தனர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது இவருக்கு படங்கள் வர உள்ளன. அவற்றில் ஒன்று இவர் கதாநாயகனாக நடிக்கும் ‘ஹரா’ என்ற படம். இன்னொன்னு தளபதி விஜய்க்கு வில்லனாக வரும் ‘கோட்’ படம். இவற்றில் இவர் ஹரா படத்தில் ஹீரோவாக நடிக்க எப்படி சம்மதித்தார் என்று பார்ப்போம்.
இதையும் படிங்க… எஸ்.பி.பி. செய்த வேலை.. கோபித்துக்கொண்டு வெளியேறிய எஸ்.ஜானகி!.. இப்படியா பண்ணுவாரு!..
இதைப் பண்ணினா ரொம்ப நல்லாருக்கும் அப்படிங்கற மாதிரி ஒரு புராஜெக்ட் எனக்கு இன்னும் வரல. அந்த மாதிரி நேரத்துல ஒரு நாள் பிஆர்ஓ நிகில் முருகன் டைரக்டர் விஜய்ஸ்ரீ பற்றி சொல்லிட்டு அவரு உங்களை வச்சிப் படம் பண்ணனும்னு ஆசைப்படறாங்க. கதை கேட்டுட்டு நீங்க முடிவு பண்ணுங்கன்னு சொன்னார். ‘ஓகே’ன்னேன். கதை கேட்டேன். அதுல சில விஷயங்கள் ரொம்ப நல்லா இருந்துச்சு.
அப்ப அவருக்கிட்ட என்னோட கருத்தையும் சொன்னேன். ‘இதை இப்படி பண்ணினா நல்லாருக்குமே’ன்னு சொன்னதும் ‘எப்படி சொல்றீங்க? எந்த மாதிரி கேட்கறீங்க? என்ன எதிர்பார்க்கறீங்க?’ அதைக் கேட்டு என்னை என்கரேஜ் பண்ணினார். ரொம்ப பிரமாதமா டிஸ்கஷன் போகும்போது அவரோட திறமை எனக்குத் தெரிஞ்சது. கொஞ்ச நாள்ல படத்தோட கதை மேலே எனக்கு நல்ல நம்பிக்கை வந்தது. இதுல நடிச்சா கூட்டணியா எல்லாரும் ஜெயிக்க முடியும்னு நினைச்சேன். அதனால தான் இந்தப் படத்துல நடிச்சேன்.
ஹரா என்னோட பார்வையில முதல் படமா தான் நான் நினைக்கிறேன். ஒவ்வொரு படமும் ஒவ்வொரு நாள் சூட்டிங்கலயும் பட்டாம்பூச்சி தான். ஏன்னா இயக்குனர் சொல்றதையும் அவருக்குத் திருப்தி வர்ற மாதிரி நாங்க நடிக்கணும். அதே மாதிரி எப்படி நம்ம ஸ்டைல்ல பண்ணனும்? அவரை எப்படி சம்மதிக்க வைக்கணும்கறதும் இருக்கு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க… நான் திங்கிற சோறு நீ போடுகின்ற சோறு… பாரதிராஜா யாரை இப்படி சொல்றாருன்னு தெரியுமா?
இவருடைய சமகால ஹீரோவான ராமராஜனும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது தான் படம் நடித்தார். சாமானியன் என்ற படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தபோதும் வசூல் ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மோகன் ஜெயிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.