Connect with us
GMMNSA

Cinema News

சத்யராஜோட லொள்ளு தாங்க முடியலைடா சாமி… கவுண்டமணி, மணிவண்ணன் கூட அப்படியா நடிச்சாரு?

நடிகர் சத்யராஜ் நடிக்கும் வெப்பன் படம் வரும் 7ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதையொட்டி அவர் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். அதில் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

வெப்பன் படத்துக்கு பயங்கரமா ஸ்பெண்ட் பண்ணினா தான் முடியும். அப்படி ஒரு கேரக்டர். என்னைப் பொருத்தவரைக்கும் இது கூந்தலைக்கட்டி மலையை இழுப்பது போல் தான். என்னம்மோ, நம்ம இதுல மயிருன்னா கெட்ட வார்த்தை மாதிரி. அதைக் கூந்தல், மயிர், முடின்னு எப்படி வேணாலும் சொல்லலாம்.

என்னைப் பொருத்தவரைக்கும் முடியைக் கட்டி மலையை இழுப்பது போல் தான். இந்தப் படத்துக்காக ஏழெட்டு நாள் பைட் எடுத்தாங்க. வாகாமன்லயும் 10 நாள் பைட் எடுத்தாங்க. அங்க ஒரு செட் போட்டுருக்காங்க. ஜீப் 7 குட்டிக்கரணம் போட்டு செட்டை உடைச்சிட்டுப் போகுது. ரொம்ப நம்பிக்கையோட பண்றாங்க.

இதையும் படிங்க… அடுத்த எம்.ஜி.ஆர் இவர்தான்!.. ஜெயலலிதா சொன்ன அந்த நடிகர்!.. நடந்தது இதுதான்!…

பாரதிராஜா சாருக்கு கதை மேல நம்பிக்கை. அதை புரொடியூசர் நம்பினதாலத் தான் படம் எடுக்கிறாங்க. இந்தப் படமும் அப்படித்தான். 2 ஹீரோ. புரொடியூசர் மன்சூரும், டைரக்டர் குகனும் தான். நானு, கவுண்டமணி, மணிவண்ணன் சார் காம்பினேஷன்ல 75 பர்சன்ட் டயலாக் செட்ல வந்து உருவாக்குனது தான்.

அதனால சொல்லாததையும் அவருக்கிட்ட பேசுவேன். அப்போ அவருக்கும் காமெடி வந்தா அவரு மணிவண்ணன் கிட்ட சொல்வாரு. ‘யப்பா நம்ம ரைட்டரை வரச்சொல்லுங்கப்பான்னு. எங்கப்பா அவரு?’ம்பாரு. நான் அப்போ தம் அடிச்சிக்கிட்டு இருப்பேன்.

Weapon

Weapon

எனக்கு டயலாக்ஸ் நிறைய வரும். ஆனா அதை அவரு சொன்னா தான் நல்லாருக்கும். நான் பேசிருந்தா நல்லாருக்காது. சூட்டிங் பாக்கற எல்லாருமே சிரிப்பாங்க. நான் தான் அவருக்கு சொல்வேன். குஷ்பு படில இருந்து இறங்கி வரும்போது நான் அப்படி பார்ப்பேன். அப்போ கவுண்டமணி சொல்வாரு. ‘அடங்கப்பா… உலகநடிப்புடா சாமி… உலகத்துல கேப்மாரி, மொள்ளமாரி, முடிச்சவிக்கிய எல்லாம் பார்த்துருக்கேன். ஒட்டுமொத்தமா ஒன்னைத் தான்டா பார்க்குறேன்’னு சொல்வாரு.

அந்த டயலாக்கை நான் தான் அவருக்கு சொன்னேன். ‘என்னங்க சத்யராஜி… ஆயிரந்தான் இருந்தாலும் நீங்க ஹீரோ… உன்னைப் போயி மொள்ளமாரி, முடிச்சவிக்கின்னு சொன்னா நல்லாருக்காது’ன்னு சொல்வாரு. ‘அண்ணே… இது என் நடிப்புக்கு நீங்க கொடுக்குற பாராட்டு. இதுக்கு என்ன அர்த்தம்னா நீங்க சொல்றீங்கன்னா நான் இவ்ளோ சூப்பரா நடிக்கிறேன்னு அர்த்தம்’னு சொல்வேன்.

‘ஓ… நீங்க அப்படி ரூட் போட்டு கொண்டு போறீங்களா..’ன்னு கேட்பாரு. ‘முதல்லயே நீங்க சொல்வீங்களே உலக மகா நடிப்புடா சாமின்னு… சும்மா அடிச்சிவிடுங்க’ன்னு சொல்வேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Continue Reading

More in Cinema News

To Top