
Cinema News
சூர்யாவை கார்த்திக் சுப்புராஜ் எப்படி மாத்திட்டாரு பாருங்க!.. சூர்யா 44 ஃபர்ஸ்ட் ஷாட் வீடியோ ரிலீஸ்!
Published on
கங்குவா படத்தை முடித்த சூர்யா அடுத்ததாக வாடிவாசல் அல்லது புறநானூறு குறித்த பழங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெற்றிமாறனும் சுதா கொங்கராவுக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க சூர்யா சம்மதித்துள்ளார்.
சூரியா 44 படமாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ’லவ் லாஃப்டர் வார்’ என அடைமொழி வைத்துள்ள திரைப்படம் அந்தமானில் உருவாக்கப்பட்டு வருகிறது. இயக்குனர் வெற்றிமாறன் இன்னமும் விடுதலை 2 படத்தில் இருந்து வெளியே வரவில்லை. அந்த படத்தின் ரிலீசுக்கு பிறகு தான் அடுத்த படத்தை அவர் இயக்க ஆரம்பிப்பார்.
இதையும் படிங்க: ஆடியோ லாஞ்சே இன்னும் வைக்கல!.. அடுத்த வாரம் ராயன் எப்படி ரிலீஸ் ஆகும்?.. தனுஷுக்கு பெரிய பல்பு!..
ஆனால் அதுவரை சும்மா இருக்க முடியாதுன்னு நினைத்த சூர்யா அதிரடியாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்துவிட்டார். சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் நடிப்பில் சூர்யா 44 படம் உருவாகிறது.
ஏற்கனவே தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்தின் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால், அந்த படம் பெரிதாக ஓடாத நிலையில் மீண்டும் ஜோஜு ஜார்ஜுக்கு வெயிட்டான கதாபாத்திரத்தை கொடுக்க கார்த்திக் சுப்புராஜ் முடிவு செய்துள்ளார்.
இதையும் படிங்க: வேட்டையன் படத்திற்கு மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இல்லையா? என்னடா இது புதுக்கதையா இருக்கு..!
கடந்த ஆண்டு ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே. சூர்யாவை வைத்து ஜிகர்தண்டா 2 படத்தின் மூலம் கார்த்திக் சுப்புராஜ் கம் பேக் கொடுத்தார். அதே வெறியுடன் தற்போது சூர்யாவின் 44 வது படத்தை இயக்க உள்ளார்.
அந்தமானில் சூரியா 44 படம் இன்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அதன் முதல் காட்சியை தற்போது வெளியிட்டுள்ளார். கோடு போட்ட கலர் சட்டையில் ஃபங்கு முடி வைத்து நடிகர் சூர்யா திரும்பி முகத்தை காட்ட அவரது மீசை சிங்கம் மீசை போல இல்லாமல் ஃபிரெஞ்சு பியர்டு மீசையை மாறியிருக்கிறது. இதுதான் சூர்யாவின் தோற்றமா? நல்லா இருக்கு.. அட நல்லா இருக்குப்பா என வடிவேலு போல சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இதையும் படிங்க: அடுத்த எம்.ஜி.ஆர் இவர்தான்!.. ஜெயலலிதா சொன்ன அந்த நடிகர்!.. நடந்தது இதுதான்!…
இந்த வீடியோவை காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க..
https://x.com/karthiksubbaraj/status/1797274720733421706
KPY Bala: சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு சாம்பியன் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றவர் கே பி ஒய் பாலா....
விமர்சகர்கள் வைத்த ஆப்பு : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரஜினி. 75 வயதை கடந்தும் இன்றும் ரஜினி தமிழ்...
STR49: சின்ன வயதில் இருந்து சினிமாவில் நடித்து வருபவர் நடிகர் சிலம்பரசன். இவரின் அப்பா டி. ராஜேந்தர் இவரை சிறுவயதிலேயே சினிமாவில்...
கோட் படத்தில் நடித்து கொண்டிருந்தபோதே தான் அரசியலுக்கு வரப்போவதாக விஜய் அறிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி...
KPY Bala: கேபிஒய் பாலா குறித்து தொடர்ந்து பல சர்ச்சைகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. அதுவும் பத்திரிக்கையாளர் உமாபதி ஒரு பெரிய...