Connect with us
Kamal, Mohan

Cinema History

மோகன் நடிக்க வரலேன்னா என்ன வேலை பார்த்திருப்பார் தெரியுமா? கமல் படம் இவரால் தடையா?

80 கால கட்டத்தில் ரஜினி, கமலுக்கே டஃப் கொடுத்தவர் மோகன். இது போட்டியா என்று நிருபர் ஒருவர் மைக் மோகனிடம் கேட்டார். அதற்கு அவர் சொன்ன பதில் தான் இது.

நான் யாருக்கும் எப்பவும் போட்டியே கிடையாது. நான் இன்டஸ்ட்ரிக்கு வரும்போது ரஜினி சார் மிகப்பெரிய சூப்பர்ஸ்டார். கமல் சார் அப்பவே உலகநாயகன். அவரோட படங்களை பெங்களூர்ல போய் பார்த்திருக்கேன். மூன்று முடிச்சு. இரு நிலவுகள், முள்ளும் மலரும் என நிறைய படங்கள் காலேஜ்லயே பார்த்துருக்கேன்.

இதையும் படிங்க… இதெல்லாம் என்னால முடியாது!.. பேச மறுத்த சிவாஜி!. அசால்ட் செய்த டி.எம்.எஸ்!.. அட அந்த பாட்டா!..

இன்னொன்னு யாருக்கும் யாரும் போட்டியே கிடையாது. நல்ல படங்கள் பண்றதுக்கு வாய்ப்பு கிடைச்சது. மக்கள் ஆதரவு கிடைச்சது. அவங்க அவங்க ஸ்பேஸ் இருக்கும்.

பாலுமகேந்திரா சார் என்னை அறிமுகப்படுத்தின படம் கோகிலா. எல்லாமே அப்ப புதுசா இருந்தது. நான் நடிக்க ஆசைப்பட்டு இண்டஸ்ட்ரிக்கு வரல. நாடகத்துல இருக்கும்போது பாலுமகேந்திராவோட அசோசியேட்டரும் எங்க குரூப்ல இருந்தாரு.

அவரு கேட்டாரு. இவ்ளோ நல்லா நடிக்கிறீங்களே… நீங்க ஏன் சினிமாவுல நடிக்கக்கூடாதுன்னு கேட்டார். எனக்கு தெரியாது. தேவையில்ல. நான் பேங்க் எக்ஸாம் எழுதிக்கிட்டு இருக்கேன்னு சொன்னேன்.

Kokila

Kokila

அப்புறம் ரொம்ப கட்டாயப்படுத்தி பாலுமகேந்திரன் சார்கிட்ட சொல்லி என்னை நடிக்க வச்சாரு. என்னை கோகிலா படத்துல மிகச்சிறப்பா நடிக்க வச்சாரு. அவரு சொல்லிக் கொடுக்குற விதம் ரொம்ப அருமையா இருந்தது. அப்புறம் அந்தப் படம் வந்தபோது எனக்கு சிண்டிகேட் பேங்க்லயும் வேலை வந்தது. அதுக்கு நான் சில படங்கள் நடிக்க வேண்டியிருக்கு. நான் நடிகனா ஆயிட்டேன்.

இனி வேலை செய்ய முடியாதுன்னு சொன்னேன். உங்களுக்கு லீவ் போட்டுத் தர்ரேன். நீங்க படங்கள் நடிச்சதுக்கு அப்புறம் இங்க வந்து வேலைல ஜாயின் பண்ணுங்கன்னு சொன்னாங்க. ஆனால் தொடர்ந்து படங்கள் வந்ததால என்னால அந்த வேலைல சேர முடியாமப் போச்சு. பாலு மகேந்திரா சார் முதல் கட்டப் படப்பிடிப்பு நடத்திட்டாங்க. 3 நாள் நடிச்சேன்.

அதுக்கு இடையில என்னோட ட்ராமா குரூப்ஸ்லயே சினிமா எடுக்கறாங்க. நான் அங்கே போயிட்டேன். மைசூர் பக்கத்துல ஒரு காடு. கோகிலா படத்துக்கு 2வது கட்ட சூட்டிங். பாலுமகேந்திரா சார் ஆரம்பிச்சிட்டாங்க. அப்ப கமல் சார் ரொம்ப பிசி. அப்போ போன் கிடையாது. எனக்கு தந்தி வந்தது. உடனே அங்கே போக எனக்கு 3 நாள் ஆச்சு. பாலுமகேந்திரா சார் ரொம்ப கோபத்துல இருந்தார்.

இதையும் படிங்க… கெட்டவனுக்குள்ளயும் ஒரு நல்லவன்.. அஜித் நெகட்டிவ் ரோல்னா ஏன் ஓகே சொல்றாரு தெரியுமா?

அப்புறம் என்னோட காட்சிகளை எடுக்காம இருக்காங்க. எல்லாரும் சத்தம் போட்டாங்க. அப்புறம் கமல் சார் கூப்பிட்டார். நல்லா நடிக்கிறேல்ல. நீ ஒரு டைரி வச்சிக்க. எந்தப் படத்துக்கு எத்தனை நாள்னு அதுல மெயின்டைன் பண்ணுன்னு நிறைய ஐடியா கொடுத்தார். அதுக்கு அப்புறம் எனக்கு கால்ஷீட்ல குளறுபடி இல்ல. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top