Connect with us
ibrahim

Cinema News

இப்ராஹிம் ராவுத்தரை பயமுறுத்தி உருவான விஜயகாந்த் படம்!.. ஆர்.கே.செல்வமணி வந்ததே அப்படித்தான்!..

சினிமாவில் சில விஷயங்கள் திட்டமிடாமல் நடந்துவிடும். அது வெற்றியையும் பெற்று ஒரு கூட்டணியும் உருவாகும். அப்படி உருவான கூட்டணிதான் இப்ராஹிம் ராவுத்தர் – விஜயாகாந்த் – ஆர்.கே.செல்வமணி கூட்டணி. விஜயகாந்தின் திரைவாழ்வில் மிகவும் முக்கியமான புலன் விசாரணை மற்றும் கேப்டன் பிரபாகரன் ஆகிய 2 படங்களை இயக்கியவர் ஆர்.கே.செல்வணி.

விஜயகாந்தின் கேரியரில் சிறந்த கதை, திரைக்கதை மற்றும் ஆக்சன் காட்சிகளை கொண்ட விறுவிறுப்பான படங்களாக இவை வெளிவந்தது. விஜயகாந்துக்கு பக்க பலமாக இருந்தவர் இப்ராஹிம் ராவுத்தார். விஜயகாந்த் சென்னை வந்து வாய்ப்பு தேடியபோது அவருடனே இருந்தவர்.

இதையும் படிங்க: மௌனராகத்தை விட இதயக்கோவில் தான் மோகனுக்குப் பிடிக்குமாம்… அட இதுதான் காரணமா?

விஜயகாந்துக்கு எல்லாமுமாக இருந்தவர். கதை கேட்பது, இயக்குனரை முடிவு செய்வது, கால்ஷிட் கொடுப்பது, சம்பளம் பேசுவது என எல்லாவற்றையும் அவர்தான் செய்வார். அவர் என்ன சொல்கிறாரோ அதை விஜயகாந்த் கேட்பார். எம்.ஜி.ஆர் பாணியில் விஜயகாந்தை புரமோட் செய்து மக்களிடம் கொண்டு போர் சேர்த்ததில் முக்கிய பங்கு இப்ராஹிம் ராவுத்தருக்கு உண்டு.

RK Selvamani

RK Selvamani

சென்னை திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு சினிமாவை இயக்கும் வாய்ப்பை தயாரிப்பாளர்கள் கொடுக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் ஆர்ட் பிலில் எடுப்பார்கள். ஜனரஞ்சகமான கமர்சியல் படங்களை இயக்க தெரியாது என நினைத்தார்கள். அப்படி ஆர்.கே.செல்வமணி ராவுத்தரை அணுகியபோது அவரும், விஜயகாந்தும் அப்படித்தான் நினைத்தனர்.

இதையும் படிங்க: நண்பர் பெயரில் பல கோடி சொத்து!.. விஜயகாந்த் செய்த தரமான சம்பவம்!.. அவ்வளவு நம்பிக்கையா?!..

இதுபற்றி சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் டி.சிவா ‘துவக்கத்தில் ஆர்.கே.செல்வமணிக்கு சம்மதம் சொன்ன ராவுத்தர் அதன்பின் தயங்கினார். வெயிட் பண்ண சொன்னார். திடீரென ஒரு நாள் அவருக்கு மஞ்சள் காமாலை நோய் வந்தது. இதை பயன்படுத்தி ‘நீங்கள் அந்த பையனுக்கு செய்தது துரோகம். பாவம். அதனால்தான் உங்களுக்கு நோய் வந்துவிட்டது’ என சொன்னேன்.

புலன் விசாரணை

pulan visaranai

இதில் பயந்துபோன ராவுத்தர் ‘ அப்படி இருக்குமோ. அந்த பையன வர சொல்லுப்பா’ என சொல்லிவிட்டார். அதன்பின்னரே புலன் விசாரணை படத்தை செல்வமணி இயக்குவது உறுதியானது’ என டி.சிவா சொல்லியிருந்தார். அந்த படம் விஜயகாந்துக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இதையடுத்தே விஜயகாந்தின் 100வது படமான கேப்டன் பிரபாகரன் படத்தை செல்வமணி இயக்குவது உறுதியானது.

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top