Connect with us
vijay

Cinema News

தமிழக தேர்தல் ரிசல்ட்!.. ரெண்டு பேருக்கு மட்டும் வாழ்த்து சொன்ன விஜய்!.. பார்ட்டி செம அப்செட்டா!…

நடிகராக இருக்கும் வரை ஓகே. ஆனால் அரசியல் என வந்துவிட்டால் நிறைய தைரியம் வேண்டும். தில்லாக பேச தெரிந்திருக்க வேண்டும். ஆளும் கட்சியையே எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். எல்லோரையும் நண்பராக்கி கொள்ள முடியாது. அரசியலில் பல எதிரிகளும் உருவாகும் நிலை ஏற்படும். அதையெல்லாம் சமாளிக்க வேண்டும். முடிவுகளை சரியாக எடுக்க தெரிய வேண்டும்.

கோபப்பட்டாலும் அதை வெளியே காட்டாமல் இருக்க வேண்டும். சரியாக சொல்ல வேண்டுமெனில் சினிமாவை விட அரசியலில் அதிகம் நடிக்க தெரிய வேண்டும். இது தமக்கு செட் ஆகாது என்பதால்தான் ரஜினி அரசியலுக்கு வரவில்லை என சொன்னார். மனதில் பட்டதை தைரியமாக பேசியதால்தான் அரசியலில் கடும் விமர்சனத்திற்கு ஆளானார் விஜயகாந்த்.

Tamil movie actor Vijay is set to take a decisive step into Tamil Nadu politics. — The Straits Times/ANN

ரஜினி, விஜயகாந்துக்குபின் பின் அரசியல் அவதாரம் எடுத்திருப்பவர் நடிகர் விஜய். பல வருடங்களாக தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து இது தொடர்பாக பேசி வந்தார். சில மாதங்களுக்கு முன்பு அரசியலுக்கு வரப்போவதாகவும், 2026 சட்டமன்ற தேர்தலே தனது இலக்கு எனவும், சினிமாவில் தொடர்ந்து நடிக்கப்போவதில்லை எனவும் அறிவித்தார். தனது கட்சி பெயர் தமிழக வெற்றிக்கழகம் எனவும் அறிவித்தார்.

twit

இந்நிலையில்தான், நேற்று பராளுமன்ற தேர்தலின் முடிவுகள் வெளியானது. இதில், தமிழகத்தில் திமுக 40 இடங்களிலும் வென்று சாதனை படைத்திருக்கிறது. மத்தியில் பாஜகவே மீண்டும் ஆட்சியை அமைக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆனால், விஜய், திமுகவுக்கோ, பாஜகவுக்கோ வாழ்த்து எதுவும் தெரிவிக்கவில்லை.

pawan

ஆனால், ஆந்திராவில் வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடு மற்றும் நடிகர் பவன் கல்யாண் ஆகியோருக்கு மட்டும் வாழ்த்து சொல்லி டிவிட்டரில் பதிவிட்டிருக்கிறார். தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுகவுக்கு எதிராக அரசியல் செய்ய வேண்டும் என்பதே விஜயின் விருப்பம். ஆனால், அனைத்து தொகுதியிலும் திமுகவுக்கு மக்கள் கொடுத்துள்ள ஆதரவு விஜயை ஆட்டம் காண செய்திருக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

இதனால் அவரின் அரசியல் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படும் எனவும் தொடர்ந்து அவர் சினிமாவில் நடிப்பார் எனவும் அவர்கள் பேச துவங்கிவிட்டனர். திமுகவுக்கு மக்கள் கொடுத்துள்ள ஆதரவு விஜய்க்குள் எந்த வகையான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top