விஜயோட ப்ராடக்ட்னா சும்மாவா? கவினுக்கு அடித்த அடுத்தடுத்த பம்பர் ஆஃபர்

Published on: June 6, 2024
kavin
---Advertisement---

Actor Kavin: தற்போது தமிழ் சினிமாவில் இளம் ஹீரோக்களின் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கிறது. அதிலும் குறிப்பாக கவின். இவருடைய சமீப கால படங்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்து வருகிறது. அவர் தேர்ந்தெடுக்கும் கதைகளமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கு முன் சின்னத்திரையில் ஒரு சில தொடர்களில் நடித்து வந்த கவின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் மூலம் மிகவும் பிரபலமானார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தான் கவின் உடைய வாழ்க்கை மிகவும் பிரகாசமானது என்று சொல்லலாம். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு வந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டு இன்று ஒரு தவிர்க்க முடியாத நடிகராக மாறி இருக்கிறார் கவின். இந்த நிலையில் அவருடன் நடித்த நடிகைகளை பற்றி நெட்டிசன்கள் சோசியல் மீடியாக்களில் ஒரு சில மீம்ஸ்களாக போட்டு வருகிறார்கள்.

இதையும் படிங்க: பேரழகன்’ படப்பிடிப்பில் நடந்த சம்பவம்! சிகரெட் பிடிப்பதையே நிறுத்திய சூர்யா.. என்னவா இருக்கும்?

ஆரம்ப காலங்களில் கவின் ஒரு சில படங்களில் நடித்தாலும் அவருடைய சமீப கால படங்கள் மட்டும் தான் அவருக்கு கை கொடுத்து வருகின்றன. அந்த வகையில் டாடா,லிஃப்ட் போன்ற படங்கள்தான் அவருடைய வாழ்க்கையையே திருப்பி போட்ட படமாக அமைந்தது. இதற்கு காரணம் அந்த படத்தில் நடித்த ஹீரோயின்கள் விஜய் உடன் நடித்த ராசி தான் காரணம் எனக் கூறி வருகிறார்கள்.

அதாவது டாடா படத்தில் கவினுக்கு ஜோடியாக அபர்ணாதாஸ் நடித்திருப்பார். அவர் விஜய்யுடன் சேர்ந்து பீஸ்ட் படத்தில் நடித்த நடிகை. அதே போல லிப்ட் படத்தில் கவினுக்கு ஜோடியாக நடித்த நடிகை அமிர்தா ஐயர். அவரும் விஜய் நடித்த பிகில் படத்தில் நடித்திருப்பார். இதற்கிடையில் ஆகாஷ் வாணி என்ற ஒரு டிவி சீரிஸிலும் கவின் நடித்திருப்பார்.

இதையும் படிங்க: சூர்யா மீது செம கடுப்பில் சிறுத்தை சிவா?.. கங்குவாவுக்கு அதைக்கூட பண்ண மாட்றாரே என்கிற வருத்தம்!

அவருக்கு ஜோடியாக நடித்தவர் பிகில் படத்தில் நடித்த ரெப்பா ஜான் என்ற நடிகை. இப்போது அடுத்ததாக கவின் லேடிஸ் சூப்பர் ஸ்டார் உடன் இணைந்து நடிக்க இருக்கிறார் என்ற ஒரு தகவல் போய்க்கொண்டிருக்கின்றது .நயன்தாராவை பற்றி சொல்லவே வேண்டாம் .விஜய்யோட நடித்த எல்லா படங்களும் சூப்பர் ஹிட். அதனால் கவினின் அடுத்த இந்த படமும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும் என சொல்கிறார்கள். இது கொஞ்சம் ஓவராக இருந்தாலும் விஜய் ரசிகர்கள் இந்த வகையில் விஜயை கொண்டாடி வருகிறார்கள்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.