கன்னட படத்தில் நடிக்க துவங்கினாலும் தெலுங்கு, தமிழ், ஹிந்தி என பேன் இண்டியா நடிகையாக மாறி இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கு படங்கள் மூலம்தான் இவர் ரசிகர்களிடம் அதிகம் பிரபலமானார். குறிப்பாக விஜய தேவரகொண்டாவுடன் இணைந்து இவர் நடித்த கீதா கோவிந்தம் படம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் இவரை அதிகம் பிரபலப்படுத்தியது.

rashmika

தமிழில் சுல்தான் படம் மூலம் அறிமுகமானார். அதன்பின் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் நடித்திருந்தார். இவர் விஜயின் தீவிர ரசிகை. கில்லி படம் பார்த்தது முதலே விஜயை ராஷ்மிகாவுக்கு மிகவும் பிடிக்கும். நல்ல வாய்ப்புக்காக காத்திருந்த போதுதான் வாரிசு பட வாய்ப்பு கிடைத்தது.

rashmika

இப்படத்தின் பூஜை விழாவில் இவர் விஜயிடம் நெருக்கம் காட்டிய புகைப்படங்கள் அப்போது வைரலாகியது. வாரிசு படத்தில் விஜய்க்கு சமமாக நடனமும் ஆடியிருந்தார். அல்லு அர்ஜூனுடன் இவர் நடித்த புஷ்பா திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இதன் மூலம் இவருக்கு ஹிந்தியிலும் வாய்ப்புகள் வந்தது.

rashmika

குறிப்பாக ரன்வீர் கபூருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்த அனிமல் திரைப்படம் எதிர்மறை விமர்சனங்களையும் தாண்டி நல்ல வசூலை பெற்றது. இந்த படத்தில் முத்தக்காட்சி மற்றும் படுக்கையறை காட்சிகளிலும் துணிந்து நடித்து அதிர்ச்சி கொடுத்தார் ராஷ்மிகா. இப்போது புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார்.

rashmika

இந்த படமும் பேன் இண்டியா படமாக உருவாகி வருகிறது. மேலும், சில தெலுங்கு படங்களிலும் ஒரு ஹிந்தி படத்திலும் ராஷ்மிகா நடித்து வருகிறார். அவ்வப்போது துக்கலான கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், சைனிங் அழகை காட்டி ராஷ்மிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இளசுகளை இம்சை செய்துள்ளது.

rashmika

சிவா
முருகன் 10 ஆண்டுகளாக டிஜிட்டல் செய்தித்துறையில் பணியாற்றி வருகிறார். கடந்த 2018ம் ஆண்டு முதல் சினிரிப்போர்டர்ஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல் மற்றும் பொழுதுபோக்கு செய்திகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.