Connect with us
Mohan

Cinema News

மோகனின் முதல் படப்பிடிப்பு அனுபவமே இவ்ளோ ஜல்சாவா? ரொம்ப கொடுத்து வச்சவரு போல..!

80களில் தமிழ்த்திரை உலகில் பாடல்களாலே தன் படங்களுடைய வெற்றியைத் தீர்மானித்து புதிய களம் கண்ட கதாநாயகனாக வலம் வந்தவர் மைக் மோகன். இவருக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று ‘ஹரா’ என்ற படம் வெளியாகியுள்ளது. மீண்டும் கம்பேக் கொடுப்பாரா என்பது இந்தப் படத்தின் ரிசல்டுக்குப் பிறகு தெரிந்து விடும்.

அந்த வகையில் அவரைப் போட்டிப் போட்டுக் கொண்டு சமூக வலைதளங்கள் பேட்டி எடுத்து வருகின்றன. பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் அவரை பேட்டி கண்ட போது மோகன் தனது முதல் படமான பாலுமகேந்திராவின் கோகிலாவின் படப்பிடிப்பில் நடந்த சில சுவையான சம்பவங்களைப் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க… விஜய்யை மட்டும் சீண்டாதீங்க!.. அவரும் அந்த நடிகர் போல விஸ்வரூபம் எடுப்பார்.. பிரபலம் பேட்டி!..

சித்ரா லட்சுமணன் உங்களோட முதல் பட அனுபவம் எப்படி இருந்தது என்று மோகனை கேட்க அதற்கு அவர் சொன்ன பதில் தான் இது.

பெங்களூருவில கப்பன் பார்க்னு ஒரு இடம் இருக்கு. அங்க தான் சூட்டிங் நடந்தது. நான் ஸ்கூட்டர்ல வந்துக்கிட்டு இருக்கணும். வந்த உடனே ஒரு பொண்ணு சடர்னா கிராஸ் பண்ணிப் போகுது. அங்கே சடர்னா பிரேக் பண்ணி அப்படி போமான்னு சொல்லணும். போகும்போது அவளோட பேக் சைடு பார்த்து ரொம்ப ரசிக்கணும். அதான் என்னை வச்சி எடுத்த முதல் சீன்.

அந்த ஷாட்டைத் தான் எடுத்தாரு. அப்புறமா தான் கமல் சாரோட காம்பினேஷன். ஆனா இதைத் தான் பர்ஸ்ட் எடுத்தாரு. இதை அவரு சொன்ன மாதிரியே நடிச்சேன். பாலு சார் ரொம்ப ஹேப்பி. இயல்பா அந்த வயசுல பொண்ணைப் பார்த்து ரசிக்கறதுன்னா அது ரொம்ப நல்ல எக்ஸ்பிரீயன்ஸா இருந்துச்சு.

இதையும் படிங்க… திரை உலகைக் கலக்கப் போகும் இன்றைய படங்கள்… ஜெயிக்கப் போவது யாரு?

சூட்டிங்க்னாலே கமல் சாரைப் பார்க்க 500 பேரு வருவாங்க. அவரைப் பார்த்துக்கிட்டே இருக்கத் தான் தோணும். அவரு கொஞ்சம் சாப்டான கேரக்டர். எனக்கு அவரைக் கொஞ்சம் புஷ் பண்ற கேரக்டர். அவருக்கும் எனக்கும் நட்புன்னு எல்லாம் சொல்லக்கூடாது. அவரு என்னைக்குமே பெரியவர். அவரு மேல இருக்குற மரியாதை என்னைக்குமே இருக்கும். எங்கேயாவது பார்த்தா பேசிக்குவோம். அவரோட போட்டோ எடுக்கணும்னா எடுத்துப்போம். அவ்வளவு தான் என்கிறார் மைக் மோகன்.

 

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top