Cinema History
அதை மட்டும் கரெக்டா சொன்னா எந்தப் படமும் ஹிட் தான்…! வெற்றிப்பட இயக்குனர் சொல்லும் சீக்ரெட்
ஒரு படத்தின் வெற்றிக்கும், தோல்விக்கும் என்ன காரணம் என்பதைத் தெரியாமலேயே இன்று பல படங்கள் வாரந்தோறும் வருகின்றன. அவற்றில் பெரும்பாலும் தோல்வியைத் தான் தழுவுகின்றன. ஆனால் வெற்றிக்கு என்ன அவசியம் என்று தெரிந்தால் இப்படி எடுப்பார்களா?
இதையும் படிங்க…என் படத்தை பார்த்துவிட்டு எம்.ஜி.ஆர் என்னிடம் சொன்னது!.. நெகிழும் மைக் மோகன்!…
‘நான் பாடும் பாடல்’ என்ற படத்தில் சிவகுமார் ஹீரோ. மோகன் கெஸ்ட் ரோல். பாண்டியன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை இயக்கியவர் ஆர்.சுந்தரராஜன். இந்தப் படம் மெகா ஹிட். ‘வைதேகி காத்திருந்தாள்’ என்ற படத்தை விஜயகாந்தை முற்றிலும் மாறுபட்ட கேரக்டரில் காட்டி அசத்தினார். இந்தப் படமும் சூப்பர்ஹிட். இப்படி பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர் தான் இயக்குனர் ஆர்.சுந்தரராஜன்.
இன்னும் சொல்லப்போனால் அவரது முதல் படமே வெள்ளி விழா தான். மைக் மோகனின் ‘பயணங்கள் முடிவதில்லை’. இவர் வெற்றிப்படத்திற்கு என்னென்ன அவசியம் என இளம் இயக்குனர்களுக்கு டிப்ஸ் தருகிறார். வாங்க பார்ப்போம்.
‘காதலிக்க நேரமில்லை’. ‘எங்க வீட்டுப் பிள்ளை’, ‘பட்டிக்காடா பட்டணமா’ படத்தை ரசிக்கலையா…? சொல்ல வேண்டியதை கரெக்டா சொன்னா எந்தப் படமும் ஹிட்டு தான். மனைவியை நண்பனுக்கே கல்யாணம் பண்ணி வைத்து பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த படம் தான் ‘ரத்தக்கண்ணீர்’. எம்.ஆர்.ராதா அற்புதமாக நடித்திருப்பார்.
கேரக்டர் குஷ்டரோகி. கண்ணு தெரியல. சாகப்போறான். ஆனாலும் அவனுக்குள்ள இருக்குற சிந்தனைகள், அவனை மாத்த முடியாதுங்கறதை படிச்சிட்டு வந்தான் அப்படித் தான் பேசுனான்… உடம்பெல்லாம் கெட்டுப் போனதுக்கு அப்புறமும் அப்படித்தான் பேசுனான்கறது தான் கேரக்டர். அதை வச்சிக்கிட்டு அவனோட சிலையை வைங்க.
இதையும் படிங்க… ராமராஜன், மோகனுடைய படங்கள் எல்லாம் இப்ப எடுபடுமா…? என்ன சொல்கிறார் இந்த பிரபலம்..?
எல்லாரும் பார்த்துக் காறித் துப்பட்டும்ன்னு கிளைமாக்ஸ்ல சிலையையே வைக்கச் சொல்வாரு. அந்த வகையில யாரு நடிச்சாங்கறதை விட ஸ்கிரிப்ட் தான் முக்கியம். அந்த ஸ்கிரிப்ட்டுக்கு சரியான ஆர்டிஸ்டைக் கொடுத்தா இன்னும் ஒரு 50 பர்சன்ட் சக்சஸ் ஆகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.