கமலுக்கு திருப்தி இல்லையா இந்தியன் 2 மியூசிக்…? என்ன செய்யப் போகிறார் அனிருத்?

Published on: June 12, 2024
Indian 2
---Advertisement---

இந்தியன் 2 படத்தின் ஆடியோ லாஞ்ச் சமீபத்தில் வெகு விமரிசையாக நடந்தது. ஆனால் படத்தின் பாடல்கள் மீதுதான் இன்னும் ரசிகர்களுக்கு திருப்தி இல்லாமல் உள்ளது. இதைப் படத்தோடு பார்த்தால் ஒருவேளை நன்றாக இருக்கலாம்.

படம் வருகிற ஜூலை 12ம் தேதி திரையரங்குகளில் வருகிறது. அதற்கு முன் படத்தின் மீதான பல்வேறு சர்ச்சைகள் எழுந்தவண்ணம் உள்ளன. மூத்த பத்திரிகையாளர் சபீதா ஜோசப் இந்தியன் 2 பாடல்கள் குறித்தும் அவரது இசை குறித்தும் தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

Indian 2
Indian 2

கமலுக்கும், அவரது ரசிகர்களுக்கும் இந்தியன் 2 படத்தோட மியூசிக் திருப்தி இல்லை. படத்துக்கு ஆரம்பத்தில் இருந்தே பிரச்சனை. கிரேன் விபத்து உள்பட செலவுகள் அதிகம். இதனால் தயாரிப்பாளர்களுக்கு பணத்தட்டுப்பாடு. படத்தில் இது சரியில்லை. அது சரியில்லை என்பதை விட இப்போது ரிலீஸ் ஆகணும். அந்த மைன்ட் செட்டுக்குப் போயிட்டாங்க.

பணரீதியாக பிரச்சனைக்குள் சிக்கித் தவித்த இந்தியன் 2 படத்துக்குள் உதயநிதி வந்த பிறகு கொஞ்சம் மார்க்கெட் வேல்யு ஏறி இருக்கு. ஏன்னா 300 தியேட்டர் வரை தமிழ்நாடு முழுவதும் அவருக்கு இருக்கு. அதனால் விக்ரம் மாதிரி பெரிய அளவில் பிசினஸ் பண்ணலாம். முதல் பாடலே இந்தப் படத்தில் சொதப்பி விட்டார் என்பதால் இயக்குனர் ஷங்கர் ரிலீஸ் நேரத்தில் ஏதாவது இன்னும் கூடுதலாகக் கேட்டு வாங்கலாம். மாயாஜாலம் எதுவும் நடக்கலாம்.

இந்தியன் முதல் பாகத்தைப் போல இல்லை என்ற எதிர்பார்ப்பால் இந்தப் படம் பிளாப் ஆகுமா என்றால் வாய்ப்பு இருக்கு. படத்தில் ஒரு சில பாடல்கள் மாறி இருந்தால் கொஞ்சம் ரசிகர்களுக்கு திருப்தி வரும். இல்லாவிட்டால் படத்தின் வெற்றி இறங்குமுகமாகி விடும்.

அனிருத் இப்போதைக்கு கொஞ்சம் ட்ரெண்ட்ல இருப்பதால அவரை இயக்குனர் ஷங்கர் போட்டு இருக்கலாம். பைட் கொஞ்சம் பவர்புல்லா இருக்கலாம். லவ் அதிகமா இல்லங்கறதால பரபரப்பான ஸ்க்ரீன்பிளே இருக்கலாம். அதனால ஆக்ஷன் பிளாக் அதிகமாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க… கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள்!. கட்டியணைத்து கண்ணீர் விட்ட நடிகர் திலகம்!…

இந்தியன் படத்தில் ஏ.ஆர்.ரகுமான் மியூசிக்கில் 5 பாடல்களும் தரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கமலும் இந்தியன் 2 படத்திற்கு அவரையே போடலாம் என ஆலோசனை சொன்னராம். ஆனால் ஷங்கர் தான் இப்போதைய ட்ரெண்ட்செட்டுக்கு ஏற்ப அனிருத்துக்கு மாற்றிவிட்டார் என்று கூறப்படுகிறது.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.