Connect with us
tr

Cinema News

நயன் மட்டுமா? குடி போன இடத்துல சண்டை போட்டு நாறிய பிரபலங்கள்.. கல் எடுத்து எறிஞ்ச டி.ஆர்!..

Nayanthara: சமீபத்தில் நயன் மீது அவருடைய அக்கம் பக்கத்து விட்டார்கள் சில பேர் சம்பந்தப்பட்ட அசோசியேஷனில் புகார்கள் கொடுத்திருப்பதாக ஒரு சில செய்திகள் வைரலானது. அதாவது என்னதான் பிரபலமாக இருந்தாலும் அவர்கள் எல்லோரும் தனக்கு கீழ் ஆனவர்கள் என்ற எண்ணத்தை அறவே விட்டுவிட வேண்டும். அப்படி இல்லாமல் என்னுடைய ரேஞ்சே வேற என்ற மமதையில் ரொம்பவும் ஆடக்கூடாது.

அது பல பிரச்சனைகளை உண்டாக்க வழிவகுக்கும். அப்படித்தான் நயன் செய்த அட்ராசிட்டியும் பெரிய பிரச்சனையில் கொண்டு போய் முடிந்து இருக்கிறது. அதாவது ஒரு டெலிவரி பாய் வந்தாலே அது தன் குழந்தைகளுக்கு இடஞ்சல் என நினைப்பது, ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பலபேர் குடியிருக்கும் போது நீச்சல் குளத்தில் மற்றவர்கள் வந்து குளிப்பது அதுவும் தன் குடும்பத்திற்கு இடைஞ்சல் என எண்ணுவது, உள்ளே வரும் வாகனங்கள் மெதுவாக போக வேண்டும் அது என் குழந்தைகளுக்கு ஆபத்து என சொல்லுவது என அடுத்தடுத்து அவருடைய செயல்கள் அருகில் இருப்பவர்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது.

இதையும் படிங்க: ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாட தயங்கிய எஸ்.பி.பி!.. ரோஜா படத்தில் நடந்த சிறப்பான சம்பவம்!..

அதனால் ஒட்டுமொத்தமாக நயன் மீது சுமாராக 50 புகார்கள் அந்த அசோசியேஷனில் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். நயன் மட்டுமல்லாமல் திரை உலகில் இருக்கும் இன்னும் சில பேர் இப்படிப்பட்ட பிரச்சனைகளில் சிக்கியிருந்த சம்பவமும் அரங்கேறி இருக்கிறது. அதாவது ஆரம்பத்தில் உஷா என்ற பத்திரிக்கையை நடத்திக் கொண்டிருந்தவர் டி ஆர். அப்போது அவருடைய அலுவலகத்திற்கு எதிரே பிரபல ஹிந்தி நடிகை ஜெயப்பிரதாவும் தங்கி இருந்தாராம் .அவருக்கு ஒரு தம்பியும் உண்டாம். அவரது தம்பிக்கும் டிஆருக்கும் அடிக்கடி சண்டை வருவது வழக்கமாம்.

இருவர் வீடும் எதிரெதிராக இருக்க அங்கிருந்து டி ஆர் வீட்டுக்கு கல்லை எறிவதும் டி ஆர் அவர் வீட்டில் இருந்து கல் எடுத்து எறிவதுமாக தொடர்ந்து சண்டையிலேயே ஈடுபட்டிருக்கின்றனர். இது போலீஸ் வரை சென்றும் போலீசார் கண்டுகொள்ளவில்லையாம். ஏனெனில் பிரபலங்கள் என்றால் இப்படியான பிரச்சனை வரத்தான் செய்யும் என கண்டு கொள்ளாமலேயே விட்டிருக்கின்றனர்.

இதையும் படிங்க: அனுஷ்காவுடன் பிரேக் அப்-னுல நினைச்சோம்! பிரபாஸ் திருமணம் செய்து கொள்ளாததற்கு இதான் காரணமா?

அடுத்ததாக நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். அவரும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்தபோது இவர் வருவதற்கு முன்பாகவே அங்கு அசோசியேஷன் இருந்ததாம். ஆனால் அந்த அசோசியேஷனில் யாருமே கேள்வி கேட்க மாட்டார்களாம்.

லட்சுமி ராமகிருஷ்ணன் சென்ற பிறகுதான் கேள்விக்கணைகளை தொடுத்திருக்கிறார். இப்படி அவரால் பல பிரச்சினைகள் நடந்திருக்கின்றன. அதேபோல் சரத்குமார் மீது கஸ்தூரிராஜாவின் மனைவியும் புகார் கொடுத்ததாக ஒரு செய்தி சொல்லப்படுகிறது . அதாவது மொட்டை மாடியை சரத்குமாரே ஆக்கிரமித்து கொள்கிறார் என அவர் மீது கஸ்தூரி ராஜாவின் மனைவி புகாரை கொடுத்தாராம். அதுவும் போலீஸ் வரை சென்றிருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படி திரையுலகில் இருக்கும் பல பிரபலங்கள் இந்த மாதிரி பிரச்சினைகளில் இருப்பதாக இந்த தகவலை தெரிவித்த வலைப்பேச்சு அந்தணன் கூறினார்.

இதையும் படிங்க: கமலுக்கு திருப்தி இல்லையா இந்தியன் 2 மியூசிக்…? என்ன செய்யப் போகிறார் அனிருத்?

Continue Reading

More in Cinema News

To Top