சிம்புவ பத்தி தப்பா பேசி வசமா மாட்டிய தயாரிப்பாளர்… ஆனாலும் கொஞ்சம் கூட ஃபீலாகலையே!

Published on: June 12, 2024
STR
---Advertisement---

உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் பட்டையைக் கிளப்பிய படம் வேட்டையாடு விளையாடு. இதன் 2ம் பாகமும் கண்டிப்பாக வரும். அதிலும் கமல் தான் நாயகன் என்கிறார் பிரபல தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன். இவர் எதையும் வெளிப்படையாகப் பேசக்கூடியவர். அவர் தான் எடுத்த படங்களிலேயே வேட்டையாடு விளையாடு படத்தைத் தவிர மற்றதெல்லாம் தனக்கு திருப்தி இல்லை என்கிறார்.

இவர் சிம்புவைப் பற்றி ஒருமுறை தவறாக பேசியதாகவும் அதனால் எழுந்த சிக்கல்கள் குறித்தும் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சிம்புவைப் பற்றி ஒரு முறை கௌதம் மேனன் கிட்ட தப்பா பேசிட்டேன். அவரு போய் சொல்லிப்புட்டாரு. இந்த மாதிரி சிம்புவை வச்சி எல்லாம் படம் எடுக்கணும்னா அவங்க அப்பாவைக் கூப்பிடணும்னு சொன்னேன். அதைக் கௌதம் சார் சொல்லிப்புட்டாரு. அதனால சிம்பு எங்கிட்ட போன்ல பேசறது இல்ல. நான் என்ன சொல்றேன்னா அது உண்மை தான். நான் பொய்யெல்லாம் சொல்லல.

Manickam Narayanan
Manickam Narayanan

கௌதமும் வேணும்னே சொல்லிருக்க மாட்டாரு. ஒரு படம் எடுத்தாரு. கொஞ்சம் ஹெல்ப் கேட்டாரு. ஐயோ நான் சிம்புவை வச்செல்லாம் படம் எடுக்க மாட்டேன். உண்மையைச் சொன்னேன். என்னால முடியாது. ஏன்னா அவரோட ஆட்டிட்டியூட் வேற. என்னோட ஆட்டிட்டியூட் வேற. அவங்க அப்பாவும் நானும் ரொம்ப க்ளோஸ். அவங்க அப்பா ரொம்ப நல்லவரு. ஆனா இந்தப் பையன் வந்து யூத்தா இருக்கான்.

எப்படியும் அப்பாவுக்கும் மகனுக்கும் வித்தியாசமான கருத்து வேறுபாடு வருதோ அந்த மாதிரி தானே. டி.ராஜேந்தர் ஒரு மாதிரி. அவரு மகன் ஒரு மாதிரி. அவரு 25 வயசுல அப்படித்தான் பண்ணுவாரு. அவரோட குணநலன்கள் மாறுற வரைக்கும் அவரை வச்சி நான் படம் எடுக்க மாட்டேன். இப்போ மாறி இருக்கலாம்.

இதையும் படிங்க… நயன் மட்டுமா? குடி போன இடத்துல சண்டை போட்டு நாறிய பிரபலங்கள்.. கல் எடுத்து எறிஞ்ச டி.ஆர்!..

நல்லது தானே. மாற்றம் என்பது மாறாதது. கமல் சாருக்கு எப்படி விக்ரம்ங்கற ஒரே படத்துல அவரு வாழ்க்கையே யூடர்ன் அடிச்சிது… அந்த மாதிரி தானே. அதே மாதிரி எல்லாருக்கும் அடிக்கும்ல. அடிக்கும். எல்லாரும் நல்லாருந்தா நல்லது தான… இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.