தக் லைஃப்’ படத்தில் நடிகருக்கு ஏற்பட்ட விபத்து.. மீண்டும் மீண்டுமா?!.. அட இவருக்கா?…

Published on: June 13, 2024
thug
---Advertisement---

Thug Life Movie: மணிரத்தினம் இயக்கத்தில் கமல் நடிப்பில் தயாராகி கொண்டுவரும் திரைப்படம் தக் லைப். இந்த படத்தில் கமலஹாசன் உடன் இணைந்து திரிஷா, சிம்பு உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்க இருக்கிறார்கள். நாயகன் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் கமலஹாசன் மணிரத்தினம் கூட்டணியில் தயாராகும் திரைப்படமாக இந்த தக் லைப் திரைப்படம் அமைந்துள்ளது.

நாயகன் படம் எப்பேர்பட்ட வெற்றியை பெற்றது என அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதுவும் ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாகத் தான் அந்த காலத்தில் அறியப்பட்டது. அதேபோல இந்த காலத்திற்கு ஏற்ப தக் லைப் திரைப்படமும் ஒரு கேங்ஸ்டர் கதைகளத்தில் அதுவும் கிராமத்து பின்னணியில் இதனுடைய கதைக்களம் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: பெரிய இயக்குனர்! அவர் இப்படி பண்ணுவாருனு நினைக்கல.. அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து போட்டுடைத்த நடிகை

மேலும் இந்த படத்தில் கமலஹாசனுடன் அபிராமி ,நாசர் .வையாபுரி ஆகியோரும் நடிக்க இருக்கிறார்கள். இந்த படத்தின் மீது திரையுலக ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஏனெனில் இதற்கு முன் வெளியான விக்ரம் திரைப்படம் கமலின் ரேஞ்சையே வேறொரு தளத்திற்கு கொண்டு சென்ற படமாக அமைந்தது.

அந்த மாஸ் வெற்றிக்கு பிறகு கமல் நடிக்கும் திரைப்படமாக இந்த திரைப்படம் அமைவதால் இதன் மீதும் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் திடீரென தக் லைஃப் படத்தில் ஒரு விபத்து ஏற்பட்டுள்ளதாக ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது .இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் என்பவர் நடித்து வருகிறார்.

joju
joju

இதையும் படிங்க: விஜய் வேஷத்தை எனக்கு கொடுங்க!.. சண்டை போட்டு படத்திலிருந்து வெளியேறிய அஜித்!..

அவர் நடிக்கும் காட்சிகளில் ஏதோ ஒரு விபத்து ஏற்பட மேலிருந்து கீழே விழுந்த ஜோஜூ ஜார்ஜுக்கு இடதுகாலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அதனால் அவர் சிறிது நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என கூறப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது .இதற்கு முன் இந்தியன் 2 திரைப்படத்திலும் ஒரு பெரிய விபத்து ஏற்பட்டு அதனால் படமே நின்று போன சம்பவம் அனைவருக்குமே தெரியும். அதற்கடுத்தபடியாக இந்த தக் லைஃப் படத்திலும் நடிகருக்கு ஏற்பட்ட இந்த விபத்து திரையுலகினர்மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.