வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த ‘தெகிடி’ பட நடிகர்! அதிர்ச்சியில் கோடம்பாக்கம்

Published on: June 13, 2024
vijayan
---Advertisement---

Pradeep K Vijayan: தெகிடி படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கும் நடிகர் பிரதீப் கே விஜயன். இவர் மர்மமான முறையில் வீட்டில் உயிரிழந்ததாக கூறப்படும் செய்தி தற்போது இணையதளங்களில் வெளியாகி ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

லிப்ட், டெடி, தெகிடி, வட்டம் போன்ற பல படங்களில் ஒரு சிறந்த குணசத்திர நடிகராக நடித்திருப்பவர் பிரதீப் கே விஜயன். வில்லன் நடிகராக நகைச்சுவை நடிகராக என பல பரிணாமங்களில் தனது நடிப்பால் ரசிகர்களிடம் பரீட்சையமானவர் பிரதீப் கே விஜயன்.

இதையும் படிங்க: வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த ‘தெகிடி’ பட நடிகர்! அதிர்ச்சியில் கோடம்பாக்கம்

அவருடைய இந்த மரணம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சினிமாவில் நடிப்பதால் சென்னையில் வசித்து வந்த இவர் கடந்த இரண்டு நாட்களாகவே வீட்டை விட்டு வெளியே வரவில்லையாம். அவருடைய தொலைபேசி நம்பருக்கு நெருங்கிய நண்பர்கள் பலமுறை தொடர்பு கொண்டபோது போனை அவர் எடுக்கவும் இல்லையாம்.

அதனால் சந்தேகம் எழ போலீசார் உதவியோடு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்திருக்கிறார்கள். அப்போதுதான் அவர்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்ததாம். அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்றும் ஒருவேளை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: 1000 படங்கள்! 50 வருட ரகசியம்.. குமரிமுத்துவின் டைரியை பார்த்து ஷாக் ஆன ஒட்டுமொத்த குடும்பம்

ஆனால் மரணத்திற்கான காரணம் என்ன என்பதை பற்றி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. மேற்கொண்டு போலீசார் இவருடைய மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திரையுலகில் இப்படி அடுத்தடுத்த மரணங்களின் செய்தி ஒட்டுமொத்த கோடம்பாக்கத்தையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. வரிசையாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நடிகர்களின் இந்த மரணம் பெரிய அளவு தாக்கத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தி வருகிறது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளியை கிடையாதா?

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.