Cinema History
ஹீரோயினுடன் ஒரே அறையில் ஒன்றரை மணி நேரம் தனியாக! பதற்றம் அடைந்த ஏவிஎம்.. பயமூட்டிய நடிகர்
AVM Production: தமிழ் சினிமாவில் பாரம்பரிய நிறுவனமாக இருப்பது ஏவிஎம் நிறுவனம். கடந்த 65 ஆண்டுகளுக்கும் மேலாக பல படங்களை இந்த நிறுவனம் தயாரித்து வெளியிட்டு இருக்கிறது. சிவாஜி எம்ஜிஆர் போன்ற பழம்பெரும் மூத்த நடிகர்களின் படங்களை வெளியிட்டதோடு அதற்கு அடுத்த தலைமுறையான ரஜினி கமல் விஜய் அஜித் என இப்போது உள்ள தலைமுறை நடிகர்களின் படங்களையும் ஏவிஎம் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.
ஆக மொத்தம் பல தலைமுறைகளை கண்ட ஒரே நிறுவனம் ஏவிஎம் நிறுவனம் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது. சிவாஜி கமல் போன்ற உன்னதமான நடிகர்களை அறிமுகப்படுத்தியதும் இந்த நிறுவனம்தான். இந்த நிலையில் ஏவிஎம் நிறுவனத்தின் ஒரு தலைவரான குமரன் ஒரு சுவாரசியமான தகவலை ஒரு பேட்டியின்போது தெரிவித்திருக்கிறார். ஹிந்தியில் ஒரு படத்தை தயாரிக்க அதுவும் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க இந்த நிறுவனம் முன் வர பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூரை ஹீரோவாக ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க: ஷங்கர் பிரம்மாண்ட இயக்குனராக இதுதான் காரணமாம்… யாருமே கேள்விப்படாத தகவலா இருக்கே..!
இதை ரிஷி கபூரிடம் சொல்ல அவரும் சம்மதித்திருக்கிறார். அதன் பிறகு ரிஷி கபூர் இந்த படத்தின் ஹீரோயின் யார் என கேட்டாராம். உடனே ஜெயசுதாவை இவர்கள் முன்மொழிய உடனே அந்த நடிகையை நான் பார்க்க வேண்டும் என ரிஷி கபூர் கூறினாராம். அந்த நேரம் ரிஷிகபூர் மும்பையில் இருக்க சென்னையில் ஒரு விழாவிற்காக அங்கு நான் வருகிறேன். அப்போது அந்த நடிகையுடன் சந்திப்பு நடைபெற ஏற்பாடு செய்யுங்கள் என ரிஷி கபூர் கூறினாராம்.
உடனே இவர்களும் ஜெயசுதாவிடம் ரிஷிகபூர் தங்களை பார்க்க ஆசைப்படுகிறார் என சொல்லி இருக்கிறார்கள். இதை கேட்டதும் ஜெயசுதாவுக்கு ஒரே பயமாம். அவர் ஏன் என்னை பார்க்க வேண்டும் என்கிறார் என கேட்டிருக்கிறார். இருந்தாலும் ஏவிஎம் நிறுவனம் சும்மா ஃபார்மாலிட்டிக்கு. அதனால் ஒன்றும் பயப்பட வேண்டாம் என சொல்லி இருக்கிறார்கள்.
இதையும் படிங்க: ஜாதியை பேசிய இயக்குனர்! கடுப்பான விஜய்சேதுபதி.. என்ன செய்தார் தெரியுமா?
அதன் பிறகு ரிஷிகபூர் சென்னை வந்ததும் ஜெயசுதாவை ரிஷிகபூரிடம் அழைத்துச் சென்று இருக்கிறார்கள். ஜெயசுதாவை பார்த்ததும் மற்ற எல்லோரையும் வெளியே போகுமாறு ரிஷி கபூர் கூறினாராம். அப்போது ஏவிஎம் நிறுவனர்கள் அதெல்லாம் முடியாது நாங்கள் கூடவேதான் இருப்போம் என சொல்ல ரிஷிகபூர் நான் ஜெயசுதாவிடம் தனியாக பேச வேண்டும் என சொல்லி இருக்கிறார்.
இது மேலும் ஜெயசுதாவுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இருந்தாலும் ஏவிஎம் ராஜன் ஜெய சுதாவிடம் இது ஒன்றும் ஹோட்டல் அறை அல்ல. நாங்கள் இந்த அறைக்கு வெளியில் தான் நிற்கிறோம். நீங்கள் ஒன்றும் பயப்பட வேண்டாம் என சொல்லி அந்த அறையை விட்டு வெளியே வந்து விட்டார்களாம். அதன் பிறகு கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் ஜெயசுதாவும் ரிஷி கபூரும் அந்த அறையில் பேசிக் கொண்டிருக்க வெளியே வந்த ரிஷி கபூர் நான் மும்பை சென்றதும் கால்ஷீட் தருகிறேன்.
இதையும் படிங்க: விஜய் கட்சியில் இணையும் ராகவா லாரன்ஸ் – பாலா?!.. பரபர அப்டேட்!…
உங்கள் மேனேஜரை மும்பைக்கு அனுப்பவும் என சொல்லிவிட்டு சென்றுவிட்டாராம். அதன் பிறகு ஒரு நாள் ஏவிஎம் நிறுவனத்தின் மேனேஜர் ரிஷி கபூரை சந்திக்க இந்த நடிகை எனக்கு வேண்டாம். எனக்கு செட்டாகாது என சொன்னாராம். அது மட்டுமல்லாமல் அவர் ஒரு நடிகையை சிபாரிசு செய்திருக்கிறார். அது ஏவிஎம் நிறுவனத்திற்கு செட்டாகாது என சொல்லிவிட்டார்களாம்.
மேலும் ஜெயசுதா இல்லை என்றால் சென்னையில் இன்னும் பல நடிகைகள் இருக்கிறார்கள். அவர்களில் யாரையாவது நடிக்க வைக்கிறோம் என ரிஷி கபூரிடம் ஏவிஎம் தரப்பிலிருந்து கூற ரிஷிகபூர் அதற்கு சம்மதம் தெரிவிக்கவே இல்லையாம். உடனே ஏவிஎம் தரப்பிலிருந்து நாங்கள் கொடுத்த முன்பண தொகையான ஐம்பதாயிரம் பணத்தை திருப்பிக் கொடுத்து விடுங்கள்.
நாங்கள் வேறு ஒரு நடிகரை வைத்து இந்த படத்தை எடுத்து விடுகிறோம் என சொல்லி இருக்கிறார்கள். அதற்கு ரிஷி கபூர் நான் சென்னைக்கு வர போக ஆன செலவு, ஜெயசுதாவை பார்த்தது இதற்கெல்லாம் இந்த 50,000 பணம் சரியாகிவிட்டது .அவ்வளவுதான் என சொல்லிவிட்டாராம். இப்படி ஒரு சம்பவம் ஏவிஎம் நிறுவனத்திற்கு நடந்திருக்கிறது என தலையில் அடிக்காத குறையாக ஏவிஎம் குமரன் அந்த பேட்டியில் கூறினார்.