Cinema News
இளையராஜாவுக்கு எக்கோ வச்ச பெரிய ஆப்பு!.. இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்!..
இளையராஜா தனது பாடல்களை யாராவது பயன்படுத்தி விட்டால் அவர்களை எதிர்த்து ஒரு பக்கம் வழக்கு தொடர்ந்து வரும் நிலையில், அவருக்கு தற்போது அதற்கு எல்லாம் உரிமை இல்லை என்பதை எக்கோ நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் போட்டு உடைத்துள்ளது.
இசைஞானி என கொண்டாடப்பட்டு வரும் இளையராஜா சமீபகாலமாக சோசியல் மீடியாவில் அதிக அளவில் ட்ரோல் செய்யப்பட்டு வர காரணமே அவருக்கு பேராசை முற்றிப் போய்விட்டது என்று தான். 96, மஞ்சுமெல் பாய்ஸ், கூலி உள்ளிட்ட படங்களுக்கு எதிராகவே இளையராஜா வழக்கு தொடர்ந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இதையும் படிங்க: விஜய் சேதுபதி படம் மரண மாஸா?.. அய்யோ முடியல பாஸா?.. மகாராஜா விமர்சனம் இதோ!..
இளையராஜா தான் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் தனக்கு தான் சொந்தம் என்றும் அதற்கான காப்புரிமை தன்னிடம் உள்ளது என்றும் கூறிவந்த நிலையில், இளையராஜா பாடல்களின் பதிப்புரிமை தொடர்பாக தயாரிப்பாளர்களுடன் எந்த ஒரு ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை என்றும் இளையராஜாவின் 4500 பாடல்களை பயன்படுத்த எக்கோ நிறுவனத்துக்குத்தான் உரிமை உள்ளது என எக்கோ நிறுவனம் மேல்முறையீட்டு வழக்கில் வாக்குவாதம் நடத்தியுள்ளது.
ஒரு காலத்தில் எக்கோ நிறுவனத்தின் தலைமை பொறுப்பை இளையராஜா வகித்து வந்த நிலையில், அப்போது அந்த நிறுவனத்துக்கு வாங்கப்பட்ட உரிமைகள் எல்லாம் தனக்குத்தான் சொந்தம் என வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: ஷங்கர் பிரம்மாண்ட இயக்குனராக இதுதான் காரணமாம்… யாருமே கேள்விப்படாத தகவலா இருக்கே..!
ஆனால், அந்த உரிமை எல்லாம் எங்களுக்குத்தான் சொந்தம் என்றும் இளையராஜாவுக்கு அந்த பாடல்களில் எந்த ஒரு உரிமையும் இல்லை என அந்த நிறுவனம் வழக்கு நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் இளையராஜா திறப்பு வாதங்களாக விசாரணை தற்போது உயர்நீதி மன்றத்தில் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்களுக்குத்தான் பாடல் தார்மீகமாக சொந்தமாகும் என்றும் எக்கோ நிறுவனம் வாதத்தை முன் வைத்துள்ள நிலையில், இளையராஜாவுக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக மாறும் எனக் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: என் ராசாவின் மனசிலே படத்தில் இளையராஜா செய்த மேஜிக்!. மிரண்டு போன ராஜ்கிரண்!…