பெண்களை சுண்டி இழுக்கும் அது இவருக்கு மட்டும் பிடிக்காதாம்..! இப்படியும் ஒரு நடிகையா..?

Published on: June 14, 2024
Amala
---Advertisement---

ரஜினி, கமலுடன் ஜோடியாக நடித்து பெயர் வாங்கியவர் நடிகை அமலா. கமலுடன் இவர் நடித்த சத்யா படம் இன்று வரை பேசப்படும் வகையில் உள்ளது. சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் இணைந்து மாப்பிள்ளை, கொடி பறக்குது, வேலைக்காரன் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். அது மட்டுமல்லாமல் கார்த்திக், சத்யராஜ், மம்முட்டி ஆகியோருடனும் இவர் ஜோடியாக நடித்த படங்கள் பிரபலமானவை. மம்முட்டியுடன் இவர் நடித்த மௌனம் சம்மதம் படத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

கார்த்திக்குடன் அக்னி நட்சத்திரமும், சத்யராஜூடன் ஜீவா படத்திலும் இவரது நடிப்பு பிரமாதமாக இருக்கும். மெல்லத்திறந்தது கதவு படத்தில் நடிகர் மோகனுடன் அமலா இணைந்து நடித்து ஆச்சரியப்படுத்தி இருப்பார். இந்தப் படத்தில் கடைசி வரை முகத்தைக் காட்டவே மாட்டார். அப்படி ஒரு அசத்தலான கேரக்டர்.

இதையும் படிங்க… ஏன்.. நீங்க இதை செய்ய மாட்டீங்களா?!.. மோகனிடம் கோபப்பட்ட கலைஞர்….

தெலுங்கு திரையுலகிலும் இவர் நடித்த படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. அங்கு இவருக்கு நடிகர் நாகர்ஜூனாவுடன் காதல் ஏற்பட்டது. பின்னர் இருவரும் கல்யாணம் செய்து கொண்டனர்.

அவர் ஒரு முறை இப்படி பேட்டி கொடுத்தது ஆச்சரியமாக இருந்தது. அதாவது பெண்கள் என்றாலே பட்டுப்புடவைகளை அவர்களுக்கு ரொம்பவும் பிடிக்கும். கல்யாணம் முதல் எந்த ஒரு சுபநிகழ்ச்சிகளுக்கும் விலை உயர்ந்த பட்டுப்புடவைகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் இவருக்குப் பட்டுப்புடவையே பிடிக்காதாம். ஏன் என்றால் உயிர்களிடத்தில் மிகவும் ஜீவகாருண்யம் உள்ளவராம். அசைவ உணவு கூட சாப்பிட மாட்டாராம்.

ஏராளமான பட்டுப்புழுக்களைக் கொன்று தானே தானே பட்டுப்புடவையைத் தயாரிக்கிறார்கள். அதனால் தான் பட்டுப்புடவையை இவருக்குப் பிடிக்காதாம். அதனால் இவர் பட்டுப்புடவையையே உடுத்துவதில்லை என்றும் சொல்கிறார். அதுமட்டுமல்லாமல் இவர் ஹைதராபாத் ப்ளூ கிராஸ் அமைப்பிலும் முக்கிய பதவியில் உள்ளாராம். இப்படியும் ஒரு நடிகையா என மற்றவர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளார் அமலா.

இதையும் படிங்க… பாரதிராஜாவை நம்பாத பாக்கியராஜ்… அப்படி என்ன நடந்தது இந்த சிஷ்யனுக்கு..?

இந்தியன் படத்தில் நடிகை மனிஷா கொய்ராலா தான் ப்ளூ கிராஸ் மெம்பராக நடித்து இருப்பார். அவர் விலங்குகள், பறவைகளை ஏராளமாக வளர்த்து வருவார். ஒரு சின்ன நாய்க்குட்டிக்கு அடிபடும்போது கூட உயிரே போனது போல துடியாய் துடித்து விடுவார். அப்படி ஒரு கதாபாத்திரம். இந்தப் படத்தில் இருந்து தான் ப்ளூகிராஸ் என்ற ஒரு அமைப்பைப் பற்றி பலருக்கும் தெரிந்தது. ஆனால் உண்மையிலேயே நடிகை அமலா அதில் முக்கிய பொறுப்பை வகித்து எவ்வுயிர்களையும் தன்னுயிர் போல நேசித்து வருவது பாராட்டுதலுக்குரிய விஷயம் தான்.

 

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.