Connect with us
vidharth

Cinema News

பர்சனல் நம்பர் இருக்கு! போன் பண்ண மாட்டேன்! திட்டுவார்.. அஜித் பற்றி விதார்த் சொன்னதை கேளுங்க

Ajith Vidharth: கோலிவுட்டில் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித். தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இன்னொரு பக்கம் விடாமுயற்சி படத்தின் வேலைகளும் மும்முரமாக நடந்து கொண்டு வருகின்றன .

இந்த இரு படங்களின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் அஜித்திற்கு என ஏராளமான ரசிகர்கள் இந்தியா முழுவதும் இருக்கின்றனர். கோலிவுட்டில் இருக்கும் சில பிரபலங்களே அஜித்தின் ரசிகர்களாக தான் இருக்கிறார்கள். அஜித் தன்னுடன் நடிக்கும் நடிகர்களிடம் சகஜமாக பழகுவது பேசுவது அவர்களுக்கு தேவையான வாழ்க்கையை பற்றிய அறிவுரைகளை வழங்குவது என அவர்களுடன் எளிதாக ஜெல்லாகி விடுவார் அஜித்.

இதையும் படிங்க: பெண்களை சுண்டி இழுக்கும் அது இவருக்கு மட்டும் பிடிக்காதாம்..! இப்படியும் ஒரு நடிகையா..?

அந்த வகையில் நடிகர் விதார்த் அஜித்தை பற்றி சமீபத்தில் ஒரு தகவலை பகிர்ந்து இருக்கிறார். அஜித்துடன் இணைந்து விதார்த் வீரம் என்ற திரைப்படத்தில் நடித்திருப்பார். இந்த படத்தில் அஜித் அண்ணனாகவும் அவருக்கு தம்பியாகவும் விதார்த் நடித்திருப்பார் .அடிப்படையில் தமிழ் சினிமாவில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கக்கூடிய நடிகர் விதார்த் .

தற்போது அவரின் நடிப்பில் அஞ்சாமை படம் வெளியாகி தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அடுத்ததாக இவருடைய நடிப்பில் லாந்தர் என்ற திரைப்படம் வெளியாக காத்துக் கொண்டிருக்கின்றது. இப்படி அடுத்தடுத்து சின்ன பட்ஜெட் படங்களில் அதுவும் நல்ல கதைக்களம் கொண்ட படங்களில் நடித்து அவருக்கு என ஒரு தனி முத்திரையை பதித்து வருகிறார் விதார்த்.

இதையும் படிங்க: ஏன்.. நீங்க இதை செய்ய மாட்டீங்களா?!.. மோகனிடம் கோபப்பட்ட கலைஞர்….

இந்த நிலையில் அஜித்தை பற்றி விதார்த் கூறும் போது அஜித்தின் பர்சனல் நம்பர் என்னிடம் இருக்கிறது. ஆனால் போன் பண்ண மாட்டேன். ஏனெனில் ஒரு வேளை நான் போன் செய்து அதை அவர் எடுக்கவில்லை என்றால் எனக்கு அது கஷ்டமாக போய்விடும். அதனால் போன் இதுவரை நான் பண்ணதே இல்லை.

ஆனால் அஜித் என்னிடம் ஏன் போன் பண்ணவே மாட்டேங்குற என திட்டுவார். அவரிடமும் நீங்களே பண்ணுங்கள் சார். நான் பேசுகிறேன் என சொல்லிவிட்டு வந்து விடுவேன். அவர் கூப்பிட்டால் உடனே போய் நிற்கும் அளவுக்கு அவருடன் எனக்கு ஒரு நெருக்கமான நட்பு இருக்கிறது என்றும் விதார்த் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: கூட நடிக்கிறவங்களையே கண்டுக்க மாட்டாரு!.. இவர் சிஎம் ஆகப் போறாரா?.. விஜய்யை விளாசிய காமெடி நடிகர்!..

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top