‘கூலி’ படத்திற்கு முன்பே லோகேஷ் இயக்கத்தில் தயாராகும் திரைப்படம்! என்னப்பா சொல்றீங்க? அதுவும் LCUவா?

Published on: June 14, 2024
loki
---Advertisement---

Lokesh kanagaraj: சினிமாவின் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். கோயம்புத்தூரில் இருந்து மிகவும் கஷ்டப்பட்டு சினிமாவில் எப்படியாவது தனக்கென ஒரு இடத்தை அடைய வேண்டும் என்ற ஒரு ஆசையினால் குறும்படங்களை எல்லாம் எடுத்து அதன் பிறகு இயக்குனராக மாறியவர்தான் லோகேஷ் கனகராஜ்.

மாநகரம் என்ற படத்தில் மூலம் திரை பயணத்தை ஆரம்பித்தவர். அந்த படத்தின் வெற்றி அடுத்தடுத்து பல பட வாய்ப்புகளை அவருக்கு வாரி வழங்கியது. ஒரே இரவில் நடக்கும் சம்பவத்தை அடிப்படையாக வைத்து கைதி படத்தை எடுத்த விதம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.  அதன் பிறகு கமல் நடிப்பில் விக்ரம் என்ற பிளாக்பஸ்டர் இப்படத்தை கொடுத்தார் லோகேஷ்.

இதையும் படிங்க: சிம்ரன் உனக்கு ஜோடியா..? கேலி செய்த பசங்க முன்னாடி கெத்து காட்டிய சூர்யா

இந்த ஒரு படம் தான் இவருக்கும் ஒரு டர்னிங் பாயிண்டாக அமைந்தது. தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் பெறும் இயக்குனர் பட்டியலில் இடம் பெற்றார். இந்த நிலையில் இவருக்கே உண்டான அடையாளமாக கருதப்படுவது எல் சி யு. கைதி ,விக்ரம், லியோ போன்ற படங்களில் இந்த எல் சி யு கனெக்ட் கண்டிப்பாக இருந்திருக்கும் .

அடுத்ததாக ரஜினியை வைத்து கூலி திரைப்படத்தை எடுக்க இருக்கிறார். அதிலும் எல் சி யு இருக்குமா என்ற ஒரு கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. ஆனால் ரஜினியை பொறுத்த வரைக்கும் அதை அவருடைய படமாக தான் பார்ப்பார். அதனால் கண்டிப்பாக சம்மதிக்கவே மாட்டார் என்ற ஒரு தகவல் பரவியது. அதனால் கூலி படத்தில் எல் சி யு இருக்குமா இல்லையா என்பது போகப் போகத்தான் தெரியும் .

இதையும் படிங்க: அது எம்.ஜி.ஆருக்கு மட்டும்தான் செட் ஆகும்!. வேற எவனுக்கும் வராது!.. ஓப்பனா சொன்ன சிவாஜி!..

இதற்கிடையில் பிரபல நடிகர் நரேன் ஒரு சூப்பரான அப்டேட் ஒன்றை கூறி இருக்கிறார். அதாவது லோகேஷ் தற்போது ஒரு குறும்படத்தை எடுத்து இருக்கிறாராம். அதுவும் ஒரு எல் சி யுவில் அமைந்த படமாக தான் வந்திருக்கிறது என்றும் பத்து நிமிடம் மட்டுமே ஒளிபரப்பாகும் அந்த குறும்படத்தில் நரேன் இருக்கிறாராம்.

மற்ற எந்தெந்த நடிகர்கள் இருக்கிறார்கள் என்பதை  நரேன் கூற மறுத்து விட்டார். ஆனால் இதுவும் ஒரு எல் சி யு படமாகத்தான் இருக்கப்போகிறது .இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் இந்த படம் ரிலீஸ் ஆகும். அதற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் இந்த படம் எப்போது இருந்து வருகிறது என நரேன் கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க: பர்சனல் நம்பர் இருக்கு! போன் பண்ண மாட்டேன்! திட்டுவார்.. அஜித் பற்றி விதார்த் சொன்னதை கேளுங்க

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.