Cinema History
எம்ஜிஆரை சண்டையில் கவிழ்த்துப் போட்ட கலைவாணர்…! பழிவாங்க துடித்த புரட்சித்தலைவர்..!
கலைவாணர் தான் எம்ஜிஆருக்கு திரையுலகில் ஒரு குருநாதர் போல இருந்து பல பாடங்களை சொல்லிக் கொடுத்துள்ளார். ஆனால் அவரது ஆரம்ப காலத்தில் இருவருக்கும் நடந்த மோதலே சுவாரசியமானது. வாங்க என்னன்னு பார்ப்போம்.
சதிலீலாவதி தான் எம்ஜிஆர் அறிமுகமான படம். இந்தப் படத்தின் போது எம்ஜிஆரின் கேரக்டர் மாறிக்கொண்டே இருந்ததாம். முதலில் ஹீரோவின் நண்பன், அடுத்து வில்லனின் அடியாள் என மாறியதாம். அதனால் அவர் அதிருப்தியில் இருந்துள்ளார். அதே நேரம் அவருடன் தான் அதாவது அதே படத்தில் தான் என்எஸ்.கிருஷ்ணனும் அறிமுகமானாராம்.
இதையும் படிங்க… இது என் படமே இல்ல!.. நான் சொன்ன எதையுமே செய்யல!.. எம்.ஜி.ஆர் சொன்ன ஹிட் படம் இதுதான்!..
ஆனால் அவர் இயல்பிலேயே நல்ல காமெடியாகப் பேசுவார் என்பதால் அவருக்கு நல்ல வரவேற்பு இருந்ததாம். அவரைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்குமாம். இது எம்ஜிஆருக்கு ஒரு சின்ன ஈகோவை வரவழைத்து விட்டது. உடனே அவரை எப்படியாவது நாம் ஜெயிக்க வேண்டும். அதனால் கோதாவிற்கு அழைக்கலாம் என முடிவு செய்து அதற்கேற்ற சூழலை உருவாக்கியுள்ளார்.
ஒரு முறை ‘என்ன ராமச்சந்திரா உடம்பை முறுக்கிக்கிட்டு பயில்வான் மாதிரி அலையற?’ன்னு என்எஸ்கே கேட்டுள்ளார். அதற்கு எம்ஜிஆரும் இது தான் சந்தர்ப்பம்… என நினைத்து ‘ஆமா… எங்கூட மோத வர்றீங்களா?’ன்னு கேட்டுள்ளார்.
இந்த மோதல்ல நாம ஜெயிச்சிட்டா எல்லாரோட கவனமும் நம்மப் பக்கம் வந்துடும்னு நினைத்தாராம். கலைவாணரும் அதற்கு சம்மதம் தெரிவித்து விட்டார். எம்ஜிஆர் என்ன நினைத்தார் என்றால் நாம் எப்பவும் பயிற்சியில் இருக்கிறோம். எளிதில் ஜெயித்து விடலாம் என்று.
ஆனால் நடந்ததே வேறு. எம்ஜிஆர் போட்ட பிடியில் இருந்து என்எஸ்கே நழுவி விட்டாராம். ஆனால் அவர் போட்ட பிடியில் நழுவ முடியாமல் திணறிய எம்ஜிஆர் மல்லாக்கப் படுத்து விட்டாராம். என்ன நடந்தது என்றே எம்ஜிஆரால் உணர முடியவில்லை.
கண்மூடி திறப்பதற்குள் எல்லாம் நடந்து விட்டது. ‘என்ன ராமச்சந்திரா மேலே எத்தனை நட்சத்திரம் இருக்குன்னு எண்ணுறீயா..?’ என கலைவாணர் கிண்டல் அடிக்க எம்ஜிஆருக்கு அவமானமாகி விட்டதாம். தொடர்ந்து இதற்குப் பழிவாங்க வேண்டும் என்று நினைத்த எம்ஜிஆர் முதல் முறை ஏதோ கவனக்குறைவாகி விட்டது.
‘2வது முறையும் மோத வருகிறீர்களா’ என என்எஸ்கே.வை கேட்க, ‘இப்ப முடியாது. எனக்குப் பசிக்குது’ன்னு நகைச்சுவையாகச் சொல்ல எல்லாருமே சிரித்து விட்டார்களாம். அப்புறம் அவரு எம்ஜிஆரிடம் ஒரு கதையை பக்குவமாக எடுத்துச் சொன்னாராம். அந்தக் கதையும் கிட்டத்தட்ட இவங்க மோதல் மாதிரி தான். அது ஒரு கேரள கதை.
இதையும் படிங்க… எம்ஜிஆருக்கு வந்ததே கோபம்… பயந்து நடுங்கிய திரையுலகம்… நடந்தது இதுதான்..!
‘இதுல இருந்து என்ன தெரியுதுன்னா எதிரியை எப்பவும் சாதாரணமா எடை போட்டு விடக்கூடாது. அவர்கள் அப்படி இருந்தாலும் அவங்களுக்கு என்று ஒரு சக்தி, திறமை இருக்கத்தான் செய்யும். இதை நீ யோசிச்சிப் பாரு..’ன்னு சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினாராம்.
அப்போது தான் எம்ஜிஆருக்கு கலைவாணரின் வார்த்தைகள் புரிந்ததாம். அதன்பின் அவரது கோபம் மறைந்து அன்பு பிறக்கிறது. அது நட்பாக மலர்கிறது. அந்த வகையில் c வாழ்க்கையில் முதல் மாற்றத்தை ஏற்படுத்தியவர் கலைவாணர் தான்.