நான் மட்டும் என்ன சொம்பையா?!.. எஸ்.கே. ரேஞ்சுக்கு சம்பளத்தை ஏத்திய தனுஷ்!..

Published on: June 19, 2024
danush
---Advertisement---

துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் தனுஷ். அண்ணன் செல்வராகவனிடம் நடிப்பு பயிற்சி எடுத்தவர். தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க இளம் நடிகராக மாறினார். ஒல்லியான உடம்பு இருந்தாலும் வெற்றிகளை கொடுத்தார்.

இளம் நடிகைகளுடன் ஜோடி போட்டு நடித்தார். மசாலா படங்களிலேயே தொடர்ந்து நடித்து வந்த தனுஷ் வெற்றிமாறனுடன் கூட்டணி போட்டபோது நல்ல திரைப்படங்கள் வெளிவந்தது. பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, அசுரன் என நடிப்புக்கு தீனி போடும் படங்களில் நடித்தார். இதில் ஆடுகளம், அசுரன் ஆகிய படங்களுக்கு தேசிய விருதும் வாங்கினார்.

ஒருபக்கம், ஹிந்தி சினிமாவுக்கும் போய் சில படங்களில் நடித்தார். ஹாலிவுட்டுக்கும் போனார். இந்தியாவின் முக்கிய இயக்குனர்கள் தனுஷை வைத்து படமெடுக்க ஆசைப்பட்டனர். ஒருபக்கம் மசாலா படங்களிலும், ஒரு பக்கம் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களிலும் நடித்து வரும் நடிகர் இவர்.

நடிகர் சிவகார்த்திகேயனை தனுஷ் வளர்த்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். சிவகார்த்திகேயனை வைத்து எதிர் நீச்சல், காக்கி சட்டை ஆகிய படங்களை தயாரித்தார். ஆனால், ஒரு கட்டத்தில் தனுஷிடமிருந்து விலகினார் சிவகார்த்திகேயன். அவரின் படங்கள் நன்றாக ஓடியதால் தனுஷை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறினார் எஸ்.கே.

sk danush

தனுஷு 15 கோடி வாங்கியபோது எஸ்.கே. 30 கோடி கேட்டார். இப்போது எஸ்.கே. தனது சம்பளத்தை மேலும் உயர்த்திவிட்டார் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், தனுஷு தனது சம்பளத்தை 50 கோடியாக உயர்த்திவிட்டாராம். அதோடு, 50 நாட்கள் மட்டுமே கால்ஷூட் கொடுப்பேன் எனவும் சொல்லிவிட்டாராம்.

அப்படி பார்த்தால் ஒரு நாளைக்கு ஒரு கோடி கேட்கிறார் தனுஷ். அவர் கேட்கும் சம்பளத்தை தயாரிப்பாளர்கள் கொடுக்க முன் வருவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சிவகார்த்திகேயன் சம்பளத்தை உயர்த்தியதால் நாமும் கேட்போம் என்கிற முடிவில் தனுஷ் இருப்பதாக சொல்லப்படுகிறது. இத்தனைக்கும் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான கேப்டன் மில்லர் ஒரு தோல்விப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.