Connect with us
vairamuthu

Cinema News

ரஜினி செய்த சம்பவம்!.. நெகிழ்ந்து போன வைரமுத்து!.. பாசமுள்ள மனிதனப்பான்னு எழுதினது தப்பில்ல!..

நிழல்கள் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பாடல் எழுத துவங்கியவர் வைரமுத்து. அதன்பின் தொர்ந்து பல பாடல்களையும் எழுதி இருக்கிறார். குறிப்பாக பாரதிராஜா – இளையராஜா கூட்டணியில் உருவான மண் வாசனை, கடலோரக் கவிதைகள், காதல் ஓவியம், முதல் மரியாதை போன்ற படங்களில் மூவரின் கூட்டணியிலும் பல அற்புதமான பாடல்கள் வெளிவந்தது.

அதன்பின் மற்ற இசையமைப்பாளர்களுக்கு எழுத துவங்கினார் வைரமுத்து. குறிப்பாக ரோஜா படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகமானபோது அந்த படத்தின் எல்லா பாடல்களையும் வைரமுத்து எழுதினார். அந்த கூட்டணி வெற்றி பெறவே ரஹ்மான் இசையமைத்த ஜென்டில்மேன், காதலன், ஜீன்ஸ், இந்தியன், லவ் பேர்ட்ஸ் என பல படங்களிலும் அற்புதமான பாடல் வரிகளை கொடுத்தார் வைரமுத்து.

இதையும் படிங்க:இரட்டைக் குதிரை சவாரியில் ஜெயிக்க இதுதான் காரணமாம்… மெல்லிசை மன்னர் சொன்ன ரகசியம்

அதேபோல், தேவா, பரத்வாஜ், வித்யா சாகர் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்களை எழுதி இருக்கிறார். இதுவரை 5 தேசிய விருதுகளையும் வைரமுத்து பெற்றிருக்கிறார். நடிகர் ரஜினிக்கு பல அசத்தலான பாடல்களை வைரமுத்து எழுதி இருக்கிறார்.

குறிப்பாக ரஜினி அறிமுகமாகும் ஓப்பனின் சாங் என சொல்லப்படும் பெரும்பாலான பாடலுக்கு வரிகள் எழுதியது வைரமுத்துதான். ஒருவன் ஒருவன் முதலாளி, வந்தேன்டா பால்காரன், நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன் என பல படங்களும் பாடல்களை எழுதி இருக்கிறார். இதனால், ரஜினிக்கு மிகவும் நெருக்கமான ஒருவர்களில் இப்போதும் இருக்கிறார் வைரமுத்து. மற்றவர்களிடம் சொல்லாத விஷயங்களை கூட ரஜினி வைரமுத்துவிடம் சொல்வார் எனவும் சொல்லப்படுகிறது.

ஜ்rajini

ஒருமுறை ரஜினியை பார்க்க சென்றிருக்கிறார் வைரமுத்து. அப்போது வைரமுத்து அணிந்திருந்த செருப்பையை ரொம்ப நேரம் கவனித்துக் கொண்டிருந்தார் ரஜினி. ‘உங்கள் உடைக்கும், செருப்புக்கும் பொருந்தவில்லை’ என சொன்ன ரஜினி உதவியாளரை அழைத்து வைரமுத்துவின் கால் செருப்பு அளவை அளவெடுக்க சொல்லி இருக்கிறார்.

அதன்பின் வைரமுத்து ஏ.ஆர்.ரஹ்மானிடம் சிறிது நேரம் பேசிவிட்டு வீட்டுக்கு போயிருக்கிறார். அப்போது ஒரு புதிய செருப்பு அங்கே இருந்தது. அதை அனுப்பியது ரஜினி என்பதும் அவருக்கு தெரிய வந்தது. ‘பாசமுள்ள மனிதனப்பா’ என நான் எழுதியது சரிதானே என சிரிக்கிறார் வைரமுத்து.

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top